Emergency row: ’இனி ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்!’ கோதாவில் குதித்த மோடி அரசு! காங்கிரஸ்க்கு ஆப்பு ரெடி!
- Samvidhaan Hatya Diwas: ஜூன் 25, 1975 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது.
- Samvidhaan Hatya Diwas: ஜூன் 25, 1975 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது.
(1 / 7)
ஆண்டு தோறும் ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
(2 / 7)
சம்விதான் ஹத்யா திவாஸ் என்ற பெயரில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. (Narendra Modi Website)
(3 / 7)
ஜூன் 25, 1975 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது.
(4 / 7)
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனநிலையைக் காட்டி, நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார் என கூறி உள்ளார். (HT_PRINT)
(5 / 7)
எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியை 'சம்விதன் ஹத்யா திவாஸ்' என்ற தினமாக கடைபிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலியை அனுபவித்த அனைத்து மக்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாள் நமக்கு நினைவுபடுத்தும்.” என்றும் அமித்ஷா ட்வீட் செய்து உள்ளார். (Amit Shah X)
(6 / 7)
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாஜக இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற திட்டமிடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. (Hindustan Times)
மற்ற கேலரிக்கள்