Check Fraud: ரூ.20 லட்சம் செக் மோசடி.. பிரபல நிதி நிறுவன இயக்குனருக்கு 6 மாதம் சிறை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு செக் மோசடி செய்ததாக கூறப்படும் சென்னையைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனத்தின் இயக்குனரான பீட்டர் அறிவரசனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

(1 / 4)
சென்னை, பெருங்குடி அருகே கந்தன்சாவடி பகுதியில் UAR நிதி லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களாக பீட்டர் அறிவரசன் மற்றும் பினு கிறிஸ்டினா ஆகியோர் உள்ளனர்.
(2 / 4)
அதில் பீட்டர் அறிவரசனிடம் சென்னை, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் பல்வேறு வகைகளில் சுமார் ரூ. 20 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால், மீண்டும் பணத்தை தராமல் பீட்டர் அறிவரசன் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
(3 / 4)
இதனால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம், தொடர்ந்து பணத்தைக் கேட்டு வந்ததால் அறிவரசன் செக் ஒன்றை அளித்துள்ளார். அதை வங்கியில் செலுத்திய போது பணமின்றி செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார்.
மற்ற கேலரிக்கள்