Pooja Room: பூஜை அறையில் இந்த 4 விசயத்தை மட்டும் மறக்காதீங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pooja Room: பூஜை அறையில் இந்த 4 விசயத்தை மட்டும் மறக்காதீங்க!

Pooja Room: பூஜை அறையில் இந்த 4 விசயத்தை மட்டும் மறக்காதீங்க!

Aug 26, 2023 06:30 AM IST Pandeeswari Gurusamy
Aug 26, 2023 06:30 AM , IST

பொதுவாக வீடுகளில் இருக்கும் பூஜை அறைகளை எப்படி பராமரிக்க வேண்டும். பூஜை அறையில் எந்த தவறுகளை செய்ய கூடாது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

அன்றாடம் பூஜை அறைக்கு உள்ளே நாம் போடும்  கோலத்தை மாற்ற வேண்டும். ஒரு நாள் போட்ட கோலத்தை பல நாட்களுக்கு வைத்து கொள்ள கூடாது. விளக்கு மேடையில் கூட சிறிய கோலம் போடலாம். இது  மிகவும் விஷேசம்.

(1 / 5)

அன்றாடம் பூஜை அறைக்கு உள்ளே நாம் போடும்  கோலத்தை மாற்ற வேண்டும். ஒரு நாள் போட்ட கோலத்தை பல நாட்களுக்கு வைத்து கொள்ள கூடாது. விளக்கு மேடையில் கூட சிறிய கோலம் போடலாம். இது  மிகவும் விஷேசம்.

அன்றாடம் நாம் வைக்கும் நெய்வேத்தியத்தை அன்றாடம் அகற்றி விட வேண்டும். இரவில் பழங்களை நெய் வேத்தியம் வைத்தால் அடுத்த நாள் காலை அதை எடுத்து விட்டு புதிதாக வைக்க வேண்டும். சமைத்த உணவு பொருட்களை நெய் வேத்திய வைத்தால் குறைந்தது அரை மணி நேரத்தில் எடுத்து நமது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இன்று காலை வைக்கும் நெய் வேத்தியத்தை அடுத்த நாள் காலை எடுத்து விட்டு புது நெய் வேத்தியம் வைத்து கடவுளை வழிபட வேண்டும்.  ஒரு வேலை நாம் நெய் வேத்தியம் வைத்து விட்டு ஊருக்கு சென்றால் ஊரிலிருந்து வந்த பின் சேர்த்து எடுத்து கொள்ளலாம். 

(2 / 5)

அன்றாடம் நாம் வைக்கும் நெய்வேத்தியத்தை அன்றாடம் அகற்றி விட வேண்டும். இரவில் பழங்களை நெய் வேத்தியம் வைத்தால் அடுத்த நாள் காலை அதை எடுத்து விட்டு புதிதாக வைக்க வேண்டும். சமைத்த உணவு பொருட்களை நெய் வேத்திய வைத்தால் குறைந்தது அரை மணி நேரத்தில் எடுத்து நமது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இன்று காலை வைக்கும் நெய் வேத்தியத்தை அடுத்த நாள் காலை எடுத்து விட்டு புது நெய் வேத்தியம் வைத்து கடவுளை வழிபட வேண்டும்.  ஒரு வேலை நாம் நெய் வேத்தியம் வைத்து விட்டு ஊருக்கு சென்றால் ஊரிலிருந்து வந்த பின் சேர்த்து எடுத்து கொள்ளலாம். (pixabay)

பூஜைக்கு தினமும் மலர்களை வைத்து வழிபடுவது நன்மை தரும். விளக்கு ஏற்றி தீபு தூப ஆராதானை செய்வது விஷேசம்.

(3 / 5)

பூஜைக்கு தினமும் மலர்களை வைத்து வழிபடுவது நன்மை தரும். விளக்கு ஏற்றி தீபு தூப ஆராதானை செய்வது விஷேசம்.

பூஜை அறையில் வைக்க கூடிய பஞ்ச பாத்திர தீர்த்தத்தை அன்றாடம் மாற்ற வேண்டும். அதில் கண்டிப்பாக தினமும் தண்ணீர் வைக்க வேண்டும். அன்றாடம் அந்த தண்ணீரில் துளசி அல்லது பூ சேர்த்து வைக்க வேண்டும். அதில் வைக்கும் தண்ணீரை துளசி செடியிலோ அல்லது பச்சை தாவரங்களுக்கு ஊற்ற வேண்டும். தீர்த்தத்தில் பூ, அல்லது துளசி வைக்க முடியாவிட்டால் மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம்  போன்ற வாசனை பொருட்களை கூட சேர்த்து கொள்ளலாம்.

(4 / 5)

பூஜை அறையில் வைக்க கூடிய பஞ்ச பாத்திர தீர்த்தத்தை அன்றாடம் மாற்ற வேண்டும். அதில் கண்டிப்பாக தினமும் தண்ணீர் வைக்க வேண்டும். அன்றாடம் அந்த தண்ணீரில் துளசி அல்லது பூ சேர்த்து வைக்க வேண்டும். அதில் வைக்கும் தண்ணீரை துளசி செடியிலோ அல்லது பச்சை தாவரங்களுக்கு ஊற்ற வேண்டும். தீர்த்தத்தில் பூ, அல்லது துளசி வைக்க முடியாவிட்டால் மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம்  போன்ற வாசனை பொருட்களை கூட சேர்த்து கொள்ளலாம்.(pixabay)

பொதுவாக சிலர் வீடுகளில் வெள்ளி செவ்வாய்களில் மட்டும் தான் பூ போடுவார்கள். அப்படி பூ போடுவதில் தவறில்லை. ஆனால் முதல்நாள் வைத்த பூக்களை அடுத்த நாள் எடுத்து சுத்தம் செய்து விட வேண்டும். மலர்கள் புதிதாக மலர்ந்திருக்கும்போது நமக்கு நல்ல ஆற்றலை தரும். ஆனால் வில்வம் துளசி போன்ற இலைகளை தவிர்த்து எந்த மலராக இருந்தாலும் அடுத்த நாள் எடுத்து விட வேண்டும். 

(5 / 5)

பொதுவாக சிலர் வீடுகளில் வெள்ளி செவ்வாய்களில் மட்டும் தான் பூ போடுவார்கள். அப்படி பூ போடுவதில் தவறில்லை. ஆனால் முதல்நாள் வைத்த பூக்களை அடுத்த நாள் எடுத்து சுத்தம் செய்து விட வேண்டும். மலர்கள் புதிதாக மலர்ந்திருக்கும்போது நமக்கு நல்ல ஆற்றலை தரும். ஆனால் வில்வம் துளசி போன்ற இலைகளை தவிர்த்து எந்த மலராக இருந்தாலும் அடுத்த நாள் எடுத்து விட வேண்டும். (pixabay)

மற்ற கேலரிக்கள்