Rudraksha: ருத்ராட்சம் அணிபவர்கள் இதை மட்டும் தப்பி தவறி கூட செய்யக்கூடாது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rudraksha: ருத்ராட்சம் அணிபவர்கள் இதை மட்டும் தப்பி தவறி கூட செய்யக்கூடாது

Rudraksha: ருத்ராட்சம் அணிபவர்கள் இதை மட்டும் தப்பி தவறி கூட செய்யக்கூடாது

Aug 01, 2023 11:48 AM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 01, 2023 11:48 AM , IST

  • சிவ சின்னமாக இருந்து வரும் ருத்ராட்சங்களை முறையாக அபிஷேகங்கள் செய்து மந்திரங்கள் ஜெபித்த பிறகு அணிய வேண்டும். இதை அணிந்த பிறகு செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன

சிவபெருமான் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய சக்தி வாய்ந்த பொருளாக  இருந்து வரும் ருத்ராட்சத்தை சிவமணி, தெய்வமணி, நாயகமணி என்று அழைக்கிறார்கள். ருத்ராட்சம் புதிதாக அணியக்கூடியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம் 

(1 / 8)

ருத்ராட்சத்தை ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் அணியலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணியலாம். ருத்ராட்சம் அணிபவர்கள் பிரதமாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயமாக தூய்மையாக  இருப்பதை, தனது இடத்தையும் தூய்மையாக வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்

(2 / 8)

இறந்தவர்களின் இறுதி சடங்குகளில்  கலந்து கொள்வதற்கு முன் ருத்ராட்ச மாலையை அணியக்கூடாது. அதை கழட்டி இறைவன் காலடியில் வைத்து விட வேண்டும் என கூறப்படுகிறது

(3 / 8)

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் ருட்ராட்சம் அணிய கூடாது. மாதவிலக்கு காலம் முடிந்த பின்னர் வழிபாடு செய்து ருத்ராட்சத்தை மீண்டும் அணியலாம்

(4 / 8)

காலையில் குளிப்பதற்கு முன் கழட்டி வைத்து விட்டு பின்னர் நன்கு நீராடிய பிறகு ருத்ராட்சத்தை அணியவும். ருத்ராட்சத்தை அணிந்து குளிக்காமல் இருந்தால் அதன் புனித தன்மை போய்விடும் என கூறப்படுகிறது

(5 / 8)

ருத்ராட்சம் அணிபவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது. இதை கட்டுபடுத்த முடியாதவர்கள் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்கலாம்

(6 / 8)

ருத்ராட்சம் அணிபவர்கள் பக்தியுடன் இருக்க வேண்டும் என்பதால் மது, சிகரெட் போன்ற போதை பழக்கங்களை கைவிட வேண்டும். அதை தொடரவும் கூடாது

(7 / 8)

27 மணிகளுக்கு குறையான எண்ணிக்கை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்தால் தோஷம் ஏற்படும் என்பதால் அதை அணிவதை தவிர்கக வேண்டும். ருத்ராட்ச மாலையை ஒற்றை படையில் மட்டும் அணிய வேண்டும்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்