Dayanaithi Maran vs Nirmala Seetharaman: நிர்மலா சீதாராமன் வாயில் வடை சுடுகிறார்! விட்டு விளாசிய தயாநிதி மாறன்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dayanaithi Maran Vs Nirmala Seetharaman: நிர்மலா சீதாராமன் வாயில் வடை சுடுகிறார்! விட்டு விளாசிய தயாநிதி மாறன்!

Dayanaithi Maran vs Nirmala Seetharaman: நிர்மலா சீதாராமன் வாயில் வடை சுடுகிறார்! விட்டு விளாசிய தயாநிதி மாறன்!

Jul 24, 2024 08:02 PM IST Kathiravan V
Jul 24, 2024 08:02 PM , IST

  • Dayanaithi Maran vs Nirmala Seetharaman: தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய மெட்ரோ ரயிலுக்கான மத்திய அரசின் பங்கு நிதி நிலுவையில் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் நிதிக்காக பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்

வாயில் வடை சுடும் பட்ஜெட் ஆக மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார். 

(1 / 8)

வாயில் வடை சுடும் பட்ஜெட் ஆக மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார். 

2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது முன்னுரிமைகளை பட்ஜெட் கொண்டுள்ளது என்று அவர் தனது உரையில் கூறினார். Photographer: Prakash Singh/Bloomberg

(2 / 8)

2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது முன்னுரிமைகளை பட்ஜெட் கொண்டுள்ளது என்று அவர் தனது உரையில் கூறினார். Photographer: Prakash Singh/Bloomberg(Bloomberg)

இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், பாஜக அரசை கண்டித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ’தமிழ் மிகவும் சிறப்பான மொழி! தமிழ் மொழியில் பேச முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம். அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன்’ என நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல் கட்ட நாடாளுமன்றத் தேர்தலின் போது பேசினார். 

(3 / 8)

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி கட்டத்தில் ‘ஒரிசா மாநிலத்தின் கட்டுப்பாட்டை தமிழர்களுக்கு எப்படி கொடுக்க முடியும்’ என்று சொன்னார். இதனை தமிழர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.

(4 / 8)

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி கட்டத்தில் ‘ஒரிசா மாநிலத்தின் கட்டுப்பாட்டை தமிழர்களுக்கு எப்படி கொடுக்க முடியும்’ என்று சொன்னார். இதனை தமிழர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற போது, ​​எனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டும் பாடுபடாமல், வாக்களிக்காத மக்களுக்காகவும் பாடுபடுவேன் என்று கூறினார். ஆனால் நமது பிரதமர், அவர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்காக உழைக்காமல் அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்காக மட்டும் உழைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் இதை கற்றுக் கொள்ள வேண்டும். 

(5 / 8)

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய மெட்ரோ ரயிலுக்கான மத்திய அரசின் பங்கு நிதி நிலுவையில் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் நிதிக்காக பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு இன்னும் ஒரு ரூபாயை கூட தரவில்லை. ரஷ்யா - உக்ரைன் போரில் போது குறைந்த விலையில் நமக்கு எண்ணெய் கிடைத்தது. ஆனால் அதனால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

(6 / 8)

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்த்தார். ஆனால் இது வரை ஒரு ரூபாய் கூட வரவில்லை, உண்மையில் அவர் அங்குள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் உண்டியலில் பணம் போடாமல் நேரடியாக அர்ச்சகரிடம் பணத்தை கொடுங்கள் என்று கூறினார். 

(7 / 8)

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்த்தார். ஆனால் இது வரை ஒரு ரூபாய் கூட வரவில்லை, உண்மையில் அவர் அங்குள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் உண்டியலில் பணம் போடாமல் நேரடியாக அர்ச்சகரிடம் பணத்தை கொடுங்கள் என்று கூறினார். (PTI)

நான் தமிழக மக்களிடம் சென்று மத்திய அரசுக்கு வரி செலுத்தாதீர்கள். ஏனென்றால் நாம் கட்டும் பணம் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடுகின்றது என்று கூறினால் சரியாக இருக்குமா?

(8 / 8)

நான் தமிழக மக்களிடம் சென்று மத்திய அரசுக்கு வரி செலுத்தாதீர்கள். ஏனென்றால் நாம் கட்டும் பணம் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடுகின்றது என்று கூறினால் சரியாக இருக்குமா?(AFP)

மற்ற கேலரிக்கள்