விருது வாங்கினாலே பலர் பேசமாட்டாங்க.. குத்துவிளக்கு ஏத்திய கதை.. பல குட்டிக்கதைகளை சொன்ன இயக்குநர் சீனு ராமசாமி
- விருது வாங்கினாலே பலர் பேசமாட்டாங்க.. குத்துவிளக்கு ஏத்திய கதை.. பல குட்டிக்கதைகளை சொன்ன இயக்குநர் சீனு ராமசாமியின் பேட்டியைக் காணலாம்.
- விருது வாங்கினாலே பலர் பேசமாட்டாங்க.. குத்துவிளக்கு ஏத்திய கதை.. பல குட்டிக்கதைகளை சொன்ன இயக்குநர் சீனு ராமசாமியின் பேட்டியைக் காணலாம்.
(1 / 6)
எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் எழுதிய ‘மகள் இருந்த வீடு’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, ‘’மேடையில் அமர்ந்ததும் சந்தோஷப்பட்டேன். இந்த மேடையில் தான் நாம் எல்லோருக்கும் தெரியும் வகையில் அமர்ந்திருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டேன்.சரியாக மைக் செட்டப்பைக் கொண்டு வந்து வைத்துவிட்டார், கேமரா மேன். நான் உட்கார்ந்திருக்கேனானு யாருக்குமே தெரியல. என்னாட இது இங்கு வாழ்க்கை பூரா போராட்டமாக இருக்கேன்னு தோணுச்சுன்னு ஒரு நிமிஷம் நினைத்தேன்.உண்மையிலேயே இந்த மேடை எனக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது. ஒரு முழுமையான கவிதை நூலைப் பற்றி பேசுவது இதுதான் எனது முதல் மேடை. இது எனக்குப் பரீட்சை போல் இருக்கிறது.
(2 / 6)
‘’விருது வாங்கினாலே முதலில் நம்மிடம் பலர் பேச மாட்டார்கள். அதுவும் கவிதைப் புத்தகம் போட்டால், யாருமே பேச மாட்டாங்கே. புத்தகம் போடுறது என்பது ஒரு பெரிய அனுபவம். எனக்கும் ரொம்ப அனுபவம் இருக்கு.குட்டிக்கதை சொன்ன இயக்குநர் சீனு ராமசாமிநானும் ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். பாக்யராஜ் ஐயா தான் அதைத் தொடங்கி வைத்தார். அதை நினைவுப்படுத்தியதற்கு மிக்க நன்றி. பாக்யா இதழில் அடிக்கடி குட்டிக்கதைகள் வரும். அடுத்து கதை. ஒருவர் பல் வலி என்று மருத்துவரிடம் சென்று, தன் வாயை மருத்துவரிடம் காட்டியிருக்கார். மருத்துவர் என்ன செய்யணும். உன் பற்களில் ஒரு பல் சொத்தையாக இருக்குதுப்பா, என்று சொல்லி, அதை மட்டும் பிடுங்கிட்டு, என்ன சாப்பிட்ட இதுக்கு முன்னோடி. அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே, இந்த மாதிரி உணவுகளை எடுத்துக்கொள்ளாதே. குளிர்ந்த பானங்களை குடிக்காதே இப்படி ஏதாவது ஒரு அட்வைஸ் பண்ணி, அந்த வாயை நலமாக்கி அனுப்பனும்''.
(3 / 6)
‘'ஒரு புத்தகத்தையோ, படத்தைப் பற்றியோ இதைப் பற்றி ஏதாவது சொல்லிட்டீங்க அப்படின்னா, அவிங்க என்ன பண்றாங்கன்னா, வாயைத் திறன்னு சொல்றாங்கே. வாயைப் பார்க்குறாங்கே. இரண்டு பல் சொத்தைப் பல்லாக இருக்கு. இது வாய் பூரா பரவிடும் அப்படின்னு ஒரு சுத்தியலை எடுத்து வாயையே உடைச்சிடுறாங்கே.இதுனாலேயே நான் எல்லாம் கவிதைப் புத்தகத்தைக் கொடுத்திட்டு, ஒரு இரண்டு நிமிஷம்கூட பார்க்கமாட்டேன். அதனால் தான், கவிதைப் பற்றி வாயே திறக்கிறது இல்ல. இங்கு என்ன பிரச்னை உண்டாகுது என்றால் வாயைத் திறந்தால், உடைச்சிடுறாங்கே.அது இன்றைக்கு இருக்கிற இணையதள உலகம் இருக்கே. அப்பப்பா, அபாயமோ, அபாயம்''.
(4 / 6)
குத்துவிளக்கு கதை சொன்ன இயக்குநர் சீனு ராமசாமி:‘’ஒரு குத்துவிளக்கு ஏற்றுவதற்கு ஒரு பல்கலைக்கழகத்தில் சிறப்புவிருந்தினராகப் போய் இருந்தேன். அப்போது தெரியாமல் விறுவிறுன்னு செருப்போடு ஏத்தப் போயிட்டேன். கேமராவைப் பார்த்ததும் கொஞ்சம் விழிப்படைந்துட்டு, செருப்பை எல்லாம் கழற்றிவைத்துவிட்டு, குத்துவிளக்கை ஏற்ற முயற்சிக்கிறேன். தீப்பெட்டி கேட்டால், செருப்பை ஏன் கழற்றுனீங்க அப்படின்னு கேட்கிறார், வாத்தியார்.நான் செருப்புப்போட்டு குத்துவிளக்கு ஏத்தமாட்டேன் என விடாப்படியாகச் சொல்கிறேன். உடனே, அந்த வாத்தியார், செருப்புப் போட்டுக்கங்க சார், அது எலெக்ட்ரிக் குத்துவிளக்குன்னு சொல்கிறார். ஷாக் எதுவும் அடிச்சிடப்போகுதுன்னு பயம்வேற காட்டுறார்''.
(5 / 6)
‘’சரி. ஓ.கே. விதி நம் வாழ்க்கையில் விளையாடுதுன்னு பக்கத்தில் ஏத்தப் போயிட்டேன். சுவிட்ச்சை மட்டும் போட்டேன். அதை போட்டோ எடுத்துப்போட்டாங்கங்க. உடனே, உனக்கு அறிவில்லையா, செருப்பைப்போட்டுக்கிட்டு குத்துவிளக்கு ஏத்துறீயே. எரிவது எலெக்ட்ரிக் லைட் என்பதைப் பார்க்கமாட்டியுறான்.100 பேர் குதிரையில் போய்க்கொண்டே இருக்கிறாங்கே. ஓடிடியில் சைலன்ஸ்ன்னு ஒரு படம் இருக்கு. சப்தம்கேட்டால் மிருகம் வந்திரும். உலக வெப்பமயமடைதலால், சத்தத்தால் அலர்ஜியான சில உயிரினங்கள் தோன்றிடும். அதுதான் சைலன்ஸ் என்கிற ஒரு படம். அந்தப் படத்தில் சத்தம் கேட்டாலே எல்லா விலங்குகளும் வந்து தாக்கிடும். அந்தமாதிரி, குதிரையில் போய்ட்டு இருக்க 100 பேர், சத்தம் கேட்டால், நம்ம கிட்ட வந்து தாக்க ஆரம்பிசிடுறாங்கே. இப்படி ஒரு பயங்கரமான உலகத்தில் இப்படி ஒரு கவிஞர் உயிரோடு இருக்கிறதே ஆச்சர்யம்’’ என பேசினார், இயக்குநர் சீனு ராமசாமி. அதைச் சொல்லிமுடித்ததும் அரங்கம் நிறைய கைதட்டல்கள் ஒலித்தன.
மற்ற கேலரிக்கள்