பெரியார் பெயரைச் சொல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதா.. ஜெயலலிதா அம்மா அவர் பெயரை யூஸ் பண்ணலையே.. இயக்குநர் பேரரசு அதிரடி
- பெரியார் பெயரைச் சொல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதா.. ஜெயலலிதா அம்மா அவர் பெயரை யூஸ் பண்ணலையே.. இயக்குநர் பேரரசு பேட்டியளித்துள்ளார்.
- பெரியார் பெயரைச் சொல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதா.. ஜெயலலிதா அம்மா அவர் பெயரை யூஸ் பண்ணலையே.. இயக்குநர் பேரரசு பேட்டியளித்துள்ளார்.
(1 / 6)
பெரியார் பெயரைச் சொல்லாமல் ஜெயலலிதா அம்மா ஆட்சி அமைத்தார் என இயக்குநர் பேரரசு பேசியுள்ளார். இதுதொடர்பாக திருப்பாச்சி, சிவகாசி படங்களில் நடிகர் விஜயை இயக்கிய இயக்குநர் பேரரசு கலாட்டா வாய்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து கூறியிருப்பதாவது, ‘’ சீமான் பல ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறார். விஜய் சாரை அப்படி பேசியிருக்கக் கூடாது. திமுகவில் தான் அப்படி மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் இருப்பாங்க,தீப்பொறி ஆறுமுகம் மாதிரி. வருவதற்கு முன்பு விஜய் சாரை ஆதரிப்பேன்னு சொல்லிட்டு வந்தபின் ப்ரோன்னு கிண்டல் பண்ணக்கூடாது. இது உங்களுக்கும் தான் பலவீனம். ஒரு கட்சித் தலைவர் ஆக இருக்கும்போது, இப்படி பேசியிருக்கக் கூடாது’’.
(2 / 6)
‘’திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள்னு விஜய் சார் சொன்னார். அது உங்களுக்கு ஒத்துவரலை என்றால் விமர்சிக்கலாம்.ஆனால், சொல்ற விதத்தில் சொல்லலாம். விஜய் சார் கட்சிப்பெயர் வைக்கும்போது அழகாக வைத்தீர்கள் தானே. நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும்போது திரும்பவும் திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் பின்பற்றனும்னு சொன்னால், அது எப்படி நல்லாயிருக்கும். அதிமுகவில் அம்மா இருக்கும்போது, பெரியாரை எப்போது தூக்கிப் பிடிச்சாங்க''.
(3 / 6)
‘’பெரியார் பெயரைச் சொல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்றால், ஜெயலலிதா அம்மா அவர் பெயரை சொல்லாமலேயே மூன்று முறை ஆட்சி அமைச்சிருக்காங்க. எம்.ஜி. ஆர் பெயரையே அந்தம்மா சொல்லமாட்டாங்க சார். எம்.ஜி.ஆர் பெயர் எலெக்ஷன் வரும் நேரத்தில் தான் இருக்கும். பெரியார் என்றாலே நாத்திகவாதி என்று ஆகிப் போயிடுச்சு. இது பெரியார் மண் எல்லாம் கிடையாது. பெரியார் இந்த மண்ணில் வாழ்ந்தார். இது தமிழர் மண். பெரியாருக்கு முன்பே சீர்திருத்தம் பேசியவர்கள் நிறையபேர் இருக்காங்க.''
(4 / 6)
‘’எம்.ஜி.ஆர் தனிசெல்வாக்கில் வந்தார். விஜய் சாருக்கும் தனி செல்வாக்கு இருக்குது. அவருக்குப் பெரியார் தேவையில்லை. விஜய் சார் பெரியாருக்குக் கட் அவுட் வைக்காமல் இருந்தால் கூட அவருக்கு விழும் ஓட்டு விழுந்திடும். யாரையாவது சொல்லியிருப்பாங்க. அதனால், பெரியார் கட் அவுட் மாநாட்டில் வைச்சிருக்காங்க. அரசியலில் ஜெயிக்கணும் என்றால் பெரியாரை நேசிக்கணுமா என்றால், மக்களை உண்மையாக நேசிக்கணும்''
(5 / 6)
‘’மக்களுக்கு என்னத்தேவை என்று நினைச்சு வந்து செய்தாலே விஜய் சாருக்கு வெற்றி தான் சார். இது எல்லாம் ஒரு பேக்கப் தான். விஜய் சார் மக்களைத் தான் நினைக்கணும். ஆக்கப்பூர்வமான திட்டங்களை அவர் சொன்னாலே போதும்.யார் பெயரையும் சொல்ல வேண்டாம். விஜய் சார் நீங்க என்ன செய்யப்போறீங்க. கல்வி, மருத்துவம் மற்றும் பிற திட்டங்களுக்கு என்னசெய்யப்போறீங்கன்னு தான் சொல்லணும். மக்கள் மத்தியில் விஜய் சாருக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குது. அதை விஜய் சார் நிறைவேற்றணும்''.
(6 / 6)
‘’சில பத்திரிகையாளர்கள் சீண்டுற மாதிரி கேள்விகள் கேட்குறாங்க. ஜெயலலிதா அம்மா, கலைஞர், ஸ்டாலின், அவர்களிடம் கேட்கும்போது நாகரிகமாகக் கேட்குறாங்க. ஆனால், விஜய் சார்கிட்ட கேள்விகள் கேட்கும்போது ஏன் அந்த நாகரிகம் இல்லை. அவர் வீக்னஸ் வந்து முன்கோபம். அவர்கிட்ட ஒரு நாள் கேள்விகேட்கும்போது டென்ஷன் பண்ணுனாங்க. கேட்கும்போது நாகரிகமாகக் கேட்டால், அவரும் கூடியவிரைவில் பிரஸ் மீட் கொடுக்கத்தான் போறார்'’ என இயக்குநர் பேரரசு பேசியிருந்தார்''.
மற்ற கேலரிக்கள்