Ramadan Celebration: ரமலான் பண்டிகையின் சிறப்புகள் என்ன?
- Ramadan Celebration Across World:ஆன்மிக சிந்தனை மேலோங்கவும், சுய ஒழுக்கம், தன்னை தானே புதுப்பித்துக்கொள்ளும் நிகழ்வாகவும் ரமலான் பண்டிகையை இசுலாமியர்கள் கொண்டாடுகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் ரமலான் கொண்டாட்டம் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
- Ramadan Celebration Across World:ஆன்மிக சிந்தனை மேலோங்கவும், சுய ஒழுக்கம், தன்னை தானே புதுப்பித்துக்கொள்ளும் நிகழ்வாகவும் ரமலான் பண்டிகையை இசுலாமியர்கள் கொண்டாடுகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் ரமலான் கொண்டாட்டம் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
(1 / 9)
இசுலாமியர்கள் பின்பற்றும் நாள்காட்டியில் ஒன்பதாவது மாதத்தில் ரமலான் நிகழ்வு கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் இசுலாமியர்கள் புனித மாதமாக கருதுகிறார்கள். உலக முழுவதும் உள்ள இசுலாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு, பானங்கள், பிற உடல் தேவைகள் என எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நோன்பு இருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியின் கலாச்சாரம் ஏற்பட ரமலான் கொண்டாட்டமானது மாறுபடுகிறது.(HT photos/Praful Gangurde)
(2 / 9)
இசுலாமியர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வாக ரமலான் இருப்பதால், நகரம் முழுவதுமே திருவிழாகோலத்தில் மாறிவிடும். வீதிகளிலும், கட்டடங்களிலும் வண்ண விலக்குகள் அலங்கரிக்கப்படுவதுடன், சந்தை பகுதியில் கூட்டம் அலைமோதும். மக்கள் ரமலான் கொண்டாட்டத்துக்காக ஆடை, அணிகலன், செருப்பு என உள்பட அனைத்தையும் புதிதாக வாங்குவார்கள்.(AFP)
(3 / 9)
சூரிய உதயத்துக்கு முன்னர் உன்னா நோன்பை தொடங்கும் இசுலாமியர்கள், சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர் அதை முடித்து கொள்கிறார்கள். அதன் அடையாளமாக அவர்கள் எடுக்கும் உணவை இஃப்தார் என்று அழைக்கிறார்கள். எகிப்து உள்பட இதர அரபு நாடுகளில், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஒன்றிணைந்து இஃப்தார் உணவு பகிர்ந்து சாப்பிடுவார்கள்(AFP)
(4 / 9)
நன்கொடை வழங்குதல்: இயன்றவர் இயலாதவர்களுக்கும், பள்ளிவாசல் பணிகள் போன்றவற்றுக்கு ரமலான் மாதத்தில் பலரும் நன்கொடை வழங்குவார்கள். அதன்படி நன்கொடையானது தேவைப்படுவோருக்கு வழங்குவதற்கு ஊக்கம் அளிக்கப்படுவார்கள் (AFP)
(5 / 9)
தாராவிஹ் தொழுகை: இசுலாமியர்கள் நாள்தோறும் வழக்கமாக ஐந்து முறை தொழுகை செய்வார்கள். ரமலான் மாதத்தில் கூடுதலாக தாராவிஹ் என்ற தொழுகையும் மேற்கொள்வார்கள். இஷா தொழுகைக்கு பின்னர் இந்த தாராவிஹ் தொழுகை வீட்டில் அல்லது பள்ளிவாசலில் வைத்து மேற்கொள்கிறார்கள்((AP Photo/Emrah Gurel))
(6 / 9)
சமூக சேவை: புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில் பல்வேறு இசுலாமியர்கள் சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். தங்களது நேரத்தை ஒதுக்கி உணவு மற்றும் இன்ன பிற அடிப்படை தேவைகளை வேண்டுவோருக்கு வழங்குதல் போன்ற பணிகளை செய்வார்கள்(AFP)
(7 / 9)
சுஹூர்: சூரிய உதயத்துக்கு முன்னரே இசுலாமியர்கள் உணவு எடுத்துக்கொள்வார்கள். அந்த உணவு சுஹூர் என்று அழைக்கப்படுகிறது. நோன்பு தொடங்குவதற்கு முன் சாப்பிடும் அந்த உணவு இலகுவானதாகவும், அன்றைய நாளுக்கான ஆற்றலை தரும் விதமாகவும் அமைந்திருக்கும்(AFP)
(8 / 9)
மொராக்கோ, துருக்கி உள்பட சில இசுலாமிய நாடுகளில் ரமலான் கொண்டாட்டமானது குடும்பத்தினர் ஒன்றுகூடி உணவு அருந்தும் நிகழ்வாகவே இருந்து வருகிறது. குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து தங்களது நோன்பு விரதத்தை முடித்துவிட்டு பின்னர் பாரம்பரிய உணவுகளை ஒன்றாக ரமலான் மாதம் முழுவதும் சாப்பிடும் வழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்(AFP)
மற்ற கேலரிக்கள்