தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Diabetes Care These Are The Indirect Symptoms Of Diabetes Affects All Organs Like Eyes, Ears, Teeth Skin

Diabetes Care : சர்க்கரை நோயின் மறைமுக அறிகுறிகள் இவைதான்! கண், காது, பல், சருமம் என அனைத்து உறுப்பையும் பாதிக்கிறது!

Mar 03, 2024 02:30 PM IST Priyadarshini R
Mar 03, 2024 02:30 PM , IST

  • Diabetes Care : சர்க்கரை நோயின் மறைமுக அறிகுறிகள் இவைதான்! கண், காது, பல், சருமம் என அனைத்து உறுப்பையும் பாதிக்கிறது!

நீரிழிவு அதாவது சர்க்கரை நோய், சைலன்ட் கில்லர் அதாவது ஆர்ப்பாட்டமின்றி கொல்லும் நோய். அதன் அறிகுறிகள் சில நாட்களுக்கு முன்னரே தெரியும். ஆனால் நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அதன் பொதுவான அறிகுறியாக தாகம் அதிகரிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆகியவைதான் அனைவரும் அறிந்த பரவலான அறிகுறிகள். ஆனால், சில அறிகுறிகள் பெரும்பாலும் வெளியே தெரியாது. அவை முன்னரே தோன்றிவிடும். எனவே இந்த அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் கவனம் தேவை.

(1 / 10)

சருமத்தில் மாற்றம் - உங்கள் சருமம், உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்பதை காட்டும் கண்ணாடி. நீரிழிவு நோயை காட்டிக்கொடுப்பதிலும் அது பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் சருமத்தில் கருந்திட்டுகள் ஏற்பட்டால், குறிப்பாக கழுத்து, அக்குள் போன்ற மடக்கும் பகுதிகளில் சருமத்தில் திட்டுகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக என்னவாக இருக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

(2 / 10)

தொடர் தொற்றுகள் - நீங்கள் தொடர் தொற்றுகளால் பாதிக்கப்பட்டால், அது உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டதன் அறிகுறியாகும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். இதனால் உங்களுக்கு அடிக்கடி ஈஸ்ட் தொற்றுகள், சிறுநீரக தொற்றுகள் மற்றும் சரும தொற்றுகள் என தொற்றுகள் ஏற்படும்.

(3 / 10)

பீரியோடான்டிட்டிஸ் -இது பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்று ஆகும். இது நீரிழிவு நோயாளுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்னையாகும். உங்கள் பற்களின் ஈறுகளை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், உங்கள் பற்களில் இருந்து எடுத்து எரிந்துவிடுவது போல் இருக்கும். தொடர் வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவை இருக்கும். எனவே உங்கள் பல் மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ளுங்கள். நீரிழிவு நோய் குறித்தும் கவனத்தில் வையுங்கள்.

(4 / 10)

பார்வையில் மாற்றம் - ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம், உங்கள் பார்வையில் தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தும். பொருட்கள் மங்கலாக தெரியும். உங்கள் திடீரென பார்வையில் மாற்றங்கள் ஏற்பட்டால், மற்ற நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளுடன் தோன்றினால், எனவே அதுகுறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே உங்கள் கண்களை அவ்வப்போது கண் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

(5 / 10)

காது கேட்பதில் மாற்றம் - ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருந்தால், அது உங்கள் சின்ன ரத்த நாளங்களில் சேதத்தை ஏற்படுத்தும். உட்புற காதுகளில் உள்ள நரம்புகள் காதுகேளாமையை ஏற்படுத்தும். அடிக்கடி காது கேளாமை பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. எனவே இவற்றை உங்கள் மருத்துவரிடம் கூறி, உங்களுக்கு வேறு ஏதேனும் நீரிழிவு நோய்க்கான ஆபத்துக்கள் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(6 / 10)

படுக்கையை ஈரமாக்கும் குழந்தைகள் - குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவது பொதுவான ஒன்று. இதுவும் சில நேரங்களில் சர்க்கரை நோயின் மறைமுக அறிகுறியாக உள்ளது. சில வயதுக்கு மேல் அது தொடர்ந்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாகும். உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் அதிகளவில் சர்க்கரை இருந்தால், அது உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை ஏற்படுத்தும். எனவே தொடர்ந்து படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழித்து வந்தால், நீங்கள் அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.

(7 / 10)

மனநிலை மாற்றம் - நீரிழிவு நோய் உங்கள் உடல் நிலையை மட்டும் பாதிக்கவில்லை. அது உங்கள் மனநிலையையும் மாற்றுகிறது. அதுவும் உங்கள் மனநிலை மற்றும் மன அமைதியை குலைப்பதாகவும் அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, குறையும்போது அது உங்கள் மனதில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. எரிச்சல், கவனிப்பதில் கடினம், பயம், பதற்றம் போன்ற அறிகுறிகளும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தான்.

(8 / 10)

கூச்சம் மற்றும் உணர்வின்மை - உங்கள் உடலில் சர்க்கரை நோய் வந்தால் அது நரம்பு மண்டலத்தை ஒரு ஆட்டு ஆட்டிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிஃபிரல் நியூரோபதி நோய் ஏற்படும். இதனால் உடல் உறுப்புகளில் கூச்சம், உணர்வின்மை போன்றவை கால்களிலும், கைகளிலும் ஏற்படும்.

(9 / 10)

பொறுப்பு துறப்பு - இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில், உரிய விளக்கங்களுடன் கொடுக்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்