Eggs Vs Egg Yolks: முட்டையின் மஞ்சள் கரு! நல்லதா? கெட்டதா? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் என்பது தெரியுமா?
- நாட்டுக் கோழி முட்டைக்கும், பிராய்லர் கோழி முட்டைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் பிராய்லர் கோழி முட்டைகளை விட நாட்டுக் கோழி முட்டைகளில் ஒமேகா 3 சத்துக்கள் கூடுதலாக உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- நாட்டுக் கோழி முட்டைக்கும், பிராய்லர் கோழி முட்டைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் பிராய்லர் கோழி முட்டைகளை விட நாட்டுக் கோழி முட்டைகளில் ஒமேகா 3 சத்துக்கள் கூடுதலாக உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
(1 / 9)
முட்டை ஆரோக்கியமான உணவாக உள்ள நிலையில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவது அவ்வளவு நல்லது அல்ல, உடலில் மாரடைப்பு ஏற்படுத்துவதற்கான காரணமாக அது அமையும் என்ற அச்சம் பலரிடம் உள்ளது.
(2 / 9)
ஆனால் இதனை முற்றிலுமாக மறுக்கும் மருத்துவர் அருண் குமார் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள இதய மருத்துவர்கள் கூட்டமைப்பு 1980-களில் நடத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு உணவில் எடுத்துக் கொள்ளும் கொலஸ்ட்ரால் 300 மில்லி கிராமிற்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். இது ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதால் இது பிற்காலத்தில் வாபஸ் பெறப்பட்டதாகவும் கூறுகிறார்.
(3 / 9)
முட்டையில் உள்ள வெள்ளை கருவில் 6 கிராம் உயரிய புரதங்கள் நிறைந்து உள்ளன. மஞ்சள் கருவை பொறுத்தவரை 5 முதல் 5.5 கிராம் அளவிற்கான கொழுப்பு உள்ளது. இதில் 28 சதவீதம் செச்சுரேட்ட் கொழுப்புகளும், 40 சதவீதம் மோனா அன்சாலிடேட் கொழுப்புகளும் உள்ளன. பாலி அன்சாலிடேட் கொழுப்புகளும் இதில் உள்ளன. ஒரு முட்டையில் 180 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.
(4 / 9)
முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால்களால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால்களை பாதிக்கிறதா என்ற ஆய்வில் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிய வந்து உள்ளது.
(5 / 9)
ஒரு நாளைக்கு ஒருவரது உடலுக்கு 1800 முதல் 2000 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் தேவைப்படுகின்றது. நமது உடலில் உள்ள கோடான கோடி செல்களுக்கான ஜவ்வுகள் கொலஸ்ட்ரால் மூலம் ஆனது.
(6 / 9)
ஒரு நாளைக்கு 3 முட்டையை எடுத்துக் கொண்டாலும், மாவுச்சத்துக்களை சீராக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துவது இல்லை. இதனால் எல்.டி.எல். கொலஸ்ரால் அதிகம் ஆவது இல்லை. ஆனால் ஹெச்.டி.எல் என்று சொல்லக் கூடிய நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கின்றது. ட்ரை கிளரேடு என்று சொல்லக்கூடிய கெட்டக் கொழுப்புகள் குறைகின்றது.
(7 / 9)
முட்டையில் வைட்டமின் ஏ, ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி 12, பாஸ்பரஸ், ஜிங்க், வைட்டமின் டி உள்ளிட்ட உயர்தர நுண்சத்துக்கள் நிறைந்து உள்ளன.
(8 / 9)
முட்டையின் மஞ்சள் கரு, மூளை வளர்ச்சி, கல்லீரல் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமான ஒரு சத்து கோலின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். மஞ்சள் கருக்களில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை மற்றும் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.
மற்ற கேலரிக்கள்