DMK VS BJP: PTR கார் மீது செருப்பு வீச்சு! பாஜகவினருக்கு ஆப்பு வைத்த நீதிபதிகள்! வ.உ.சியை சுட்டிக்காட்டி விளாசல்!
- DMK VS BJP: அமைச்சர் ஒருவரின் தேசியக்கொடி பொருத்தப்பட்ட வாகனத்தின் மீது காலணி எறிந்த விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய இயலாது. மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக கூறி உள்ளார்.
- DMK VS BJP: அமைச்சர் ஒருவரின் தேசியக்கொடி பொருத்தப்பட்ட வாகனத்தின் மீது காலணி எறிந்த விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய இயலாது. மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக கூறி உள்ளார்.
(1 / 7)
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
(2 / 7)
காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டில் பணியில் இருந்த போது இறந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரை வந்தது. மதுரை விமான நிலையத்தில் இராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அரசு சார்பில் மரியாதை செலுத்துவதற்காக வந்தார்.
(3 / 7)
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் அங்கு பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டபோது விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பை வீசி எறிந்தனர்.
(4 / 7)
இந்த சம்பவம் குறித்து 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிலரை கைது செய்தனர். இந்நிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜகவைச் சேர்ந்த வேங்கைமாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 பேர் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
(5 / 7)
அமைச்சர் ஒருவரின் தேசியக்கொடி பொருத்தப்பட்ட வாகனத்தின் மீது காலணி எறிந்த விவகாரத்தில், வழக்கை ரத்து செய்ய இயலாது. மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
(6 / 7)
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "வ.ஊ.சிதம்பரனார், காந்தியடிகள் ஆகியோர் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைவில் கொள்வது அவசியம்.(X)
மற்ற கேலரிக்கள்