விளாத்திகுளத்தில் 200 கா்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா!
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் 200 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் 200 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
(1 / 7)
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
(2 / 7)
அதன் ஒருபகுதியாக சமுதாய வளைகாப்பு விழா விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (செப்.28) நடைபெற்றது.
(3 / 7)
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்துகொண்டு விழாப்பேருரை ஆற்றினாா்.
(4 / 7)
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேல்ச்சாமி ஆகியோர் வழங்கினா்.
(5 / 7)
இதில், 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.
(6 / 7)
மேலும், கர்ப்பிணிகளுக்கு கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டு, கைகளில் வளைகாப்பு வளையல்கள் அணிவிக்கப்பட்டு ஐந்து வகையான உணவுகளும் பரிமாறப்பட்டது.
மற்ற கேலரிக்கள்