பருவநிலை மாற்றம்..மழை, பனி காலத்தில் வீட்டில் இருக்கும் குட்டி மருந்தகமாக செயல்படும் கிராம்பு! என்னென்ன நன்மைகள் பாருங்க
- மசாலா பொருள்களில் முக்கியமானதாக இருந்து வருகிறது கிராம்பு. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் கிராம்பில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
- மசாலா பொருள்களில் முக்கியமானதாக இருந்து வருகிறது கிராம்பு. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் கிராம்பில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
(1 / 6)
கொட்டாவி விடும்போதும், வாயைத் திறக்கும்போதும் சிலருக்கு துர்நாற்றும் விசுவது அசெளகரிய உணர்வை ஏற்படுத்தும். இது போன்ற தருணங்கள் அருகில் இருப்பவர்களின் செயலும் தர்மசங்கடத்தை உருவாக்கும். இந்த பிரச்னையை சமாளிக்க, இயற்கையான புத்துணர்ச்சியாக கிராம்பு செயல்படுகிறது. இதுமட்டுமில்லாமல் செரிமானம், கல்லீரல் ஆரோக்கியம், சளி இருமலை போக்குவது என பல்வேறு நன்மைகளும் கிராம்பில் உள்ளது
(2 / 6)
வாய் துர்நாற்றத்தை போக்குகிறது: வாயில் உள்ள பாக்டீரியா குணங்களை நீக்க கிராம்பு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. கிராம்புகளை வெறும் வாயில் மென்று தின்றால் வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும். இது வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகளையும் கொண்டுள்ளது(Freepik)
(3 / 6)
வாய்வழி சுகாதாரம்: பல் சொத்தை மற்றும் ஈறுகளில் உள்ல வலிகளை குறைப்பதில் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பல் வலி ஏற்பட்டால் கிராம்பை மெல்வதன் மூலம் வலி குணமாகும் வாய்வழி சுகாதாராத்துக்கான சிறந்த மருந்தாக திகழ்கிறது(Freepik)
(4 / 6)
செரிமானத்தை மேம்படுத்துகிறது: செரிமான பிரச்னைகளை கையாள்வதில் கிராம்புகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. கிராம்பு செரிமான நொதிகளை சுரப்பதன் மூலம் சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. பல்வேறு வயிற்று பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. கிராம்பு வாயு பிரச்னைகளுக்கு சிறந்த தீராவாக உள்ளது
(5 / 6)
கல்லீரலுக்கு நன்மை: கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் நிறைந்துள்ளது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க கிராம்பு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. கல்லீரலை பராமரிக்கவும், தசை வலி மற்றும் வீக்கத்தை போக்கவும் உதவுகிறது
மற்ற கேலரிக்கள்