Advocates Fight : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு.. வழக்கறிஞர்கள் இடையே பயங்கர மோதல்.. 21 பேர் மீது வழக்குப்பதிவு!
- Advocates Fight : சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Advocates Fight : சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
(1 / 6)
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நாற்காலிகளை வீசி எறிந்து இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
(2 / 6)
தாக்குதலில் காயமடைந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சக்திவேல் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
(3 / 6)
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் அண்மையில் விபத்து தொடர்பாக வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.
(4 / 6)
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சிலர் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
(5 / 6)
அப்போது, அந்த வழக்கை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றிவிடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
(6 / 6)
பேச்சுவார்த்தை திடீரென வாக்குவாதமாக மாறி, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இரு தரப்பாகப் பிரிந்து பிளாஸ்டிக் நாற்காலிகளால் பலமாகத் தாக்கிக் கொண்டனர்.இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து எழும்பூர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து மோதலை விலக்கி விட்டனர்.
மற்ற கேலரிக்கள்