கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! பார்த்தாலே ருசிக்க தூண்டும் இந்திய ஸ்நாக்ஸ்.. விருந்தினர்களுக்கு பரிமாற இதை ட்ரை செய்யுங்க
Christmas Party Snacks Ideas: கிறிஸ்துமஸ் விழா நெருங்கும் இந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை கவரும் விதமாக வித்தியாசமான ஸ்நாக்ஸ்களை தயார் செய்து பரிமாறி அனைவரின் மனதையும் கொள்ள கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்
(1 / 7)
கிறிஸ்தவர்களையும் கடந்த பிற மதத்தினரும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே வீட்டில் தடா புடலாக விருந்துகள் நடப்பதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் வழக்கமான கிறிஸ்துமஸ் பலகாரங்களாக இருந்து வரும் பிளம் கேக், குக்கீஸ் போன்றவற்றுடம் மேலும் சில உணவு வகைகள் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்
(2 / 7)
பனீர் லாலிபாப்: கிறிஸ்துமஸ் விருந்தில் பனீர் லாலிபாப் சிறந்த தேர்வாக இருக்கும், இது ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருப்பதுடன், சுவையானதாகவும் இருக்கும். இதனுடன் ஒரு காரமான டிப் வைத்துக்கொண்டால் பார்டி கலைகட்டும்
(3 / 7)
பனீர் டிக்கா: பனீர் சிற்றுண்டிகளில் மற்றொரு உணவு வகையாக காய்கறிகளுடன் சுட்ட பனீர் டிக்காவை பரிமாறலாம். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் விரும்புவார்கள். அதுமட்டுமல்லாமல் மிகவும் எளிதாக தயார் செய்யக்கூடிய உணவு வகையாகவும் இது அமைந்துள்ளது
(4 / 7)
நூடுல்ஸ் ஸ்பிரிங் ரோல்: வழக்கமாக காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் ஸ்பிரிங் ரோலுக்கு பதிலாக, நூடுல்ஸை பில்லராக செய்து, கிறிஸ்துமஸ் விருந்துக்கு வரும் விருந்தினர்களுக்குப் பரிமாறலாம். காரமாகவும், மொறுமொறுப்பும், மிருதுவான சுவையுடனும் கலந்த இருக்கும் இந்த சிற்றுண்டி வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும்
(5 / 7)
சீஸ் உருளைக்கிழங்குடன் கார்ன் பால்ஸ்: குழந்தைகளை கவரும் சீஸ் வைத்து, உருளைக்கிழங்கு கார்ன் பால்ஸ் தயார் செய்யலாம். இது சிறந்த ஆரோக்கிய சாய்ஸ் ஆக இருப்பதுடன், அனைத்து வயதினரையும் கவர்ந்த ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்
(6 / 7)
பிரட் பாக்கெட்: இந்த பிரட் பாக்கெட்டுகளை உருளைக்கிழங்கு, காய்கறி அல்லது பனீர் என எதையும் கொண்டு தயாரிக்கலாம். இவற்றை முன்கூட்டியே தயார் செய்து வைத்து கொண்டு பார்ட்டியின் போது பரிமாறலாம்
மற்ற கேலரிக்கள்