ஒரு நாள் இரவு மழைக்கே தாக்குப் பிடிக்காத சென்னை.. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர், வேகமெடுக்கும் மீட்புப் பணிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஒரு நாள் இரவு மழைக்கே தாக்குப் பிடிக்காத சென்னை.. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர், வேகமெடுக்கும் மீட்புப் பணிகள்

ஒரு நாள் இரவு மழைக்கே தாக்குப் பிடிக்காத சென்னை.. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர், வேகமெடுக்கும் மீட்புப் பணிகள்

Oct 15, 2024 01:37 PM IST Manigandan K T
Oct 15, 2024 01:37 PM , IST

  • சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களும் மழை பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னையில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்தப் புகைப்படத் தொகுப்பில் பாதிக்கப்பட்ட இடங்களையும் மீட்புப் பணிகளையும் காண்போம்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (15.10.2024) கனமழை பெய்து வரும் நிலையில், புளியந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு பணி மேற்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, அருகிலிருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்துச் சென்று தேநீர் அருந்தினார்.

(1 / 9)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை JCB இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் . இ. பரந்தாமன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

(2 / 9)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பேசின் மேம்பாலத்திலிருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்கிறதா என்பதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

(3 / 9)

இன்று (15.10.2024) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், Dr அம்பேத்கர் சாலை, தெற்கு திருமலை நகரில் தேங்கியிருந்த மழைநீரை டிராக்டர் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள்.

(4 / 9)

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு-189க்குட்பட்ட பள்ளிக்கரணை வி.ஜி.எஸ். மஹாலில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்தடைந்தனர், உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

(5 / 9)

பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் வார்டு-56 பிரகாசம் சாலை, இன்று (15.10.2024) வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து இரவு முதல் பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கின்ற மழை நீரைஅகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

(6 / 9)

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்/கோடம்பாக்கம் மண்டல கண்காணிப்பு அலுவலர் டாக்டர் எஸ். விசாகன், இ.ஆ.ப., அவர்கள், இன்று (15.10.2024) கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான்பேட்டை, புகழேந்தி தெருவிலுள்ள மழைநீரானது எம்ஜிஆர் கால்வாய் வழியாக அடையாறு ஆற்றில் தங்குதடையின்றி செல்வதை ஆய்வு செய்தார்கள்.

(7 / 9)

(8 / 9)

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாகராட்சி, மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட பகுதியில் உள்ள மழைநீரினை ஜேசிபி இயந்திரம் மற்றும் மோட்டார் பம்புகள் மூலம் எஸ்.ஆர்.எஃப். கால்வாயில் வெளியேற்றும் பணியினை மணலி மண்டல கண்காணிப்பு அலுவலர் திரு.பெ.குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மண்டல அலுவலர் திரு கோவிந்தராஜ், செயற்பொறியாளர்திரு.தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

(9 / 9)

மற்ற கேலரிக்கள்