Vilvam Health Benefits: மூல நோயாளிகளுக்கு அருமருந்து..! ஆன்மிக மகத்துவம் கொண்ட விலவத்தில் இருக்கும் மருத்துவ பலன்கள்
- Vilvam Health Benefits: சிவலிங்கத்துக்கு அபிஷேகம், சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்ய பயன்படும் வில்வ இலைகள் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டதாக உள்ளது. ஆயுர்வேதத்தின் படி, வில்வ இலைகள் உடல்நலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை போக்கவும் செய்கிறது.

(1 / 7)
ஆன்மிக மகத்துவம் கொண்ட வில்வ இலைகளில் கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, பி 1 மற்றும் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதய ஆரோக்கியம் மற்றும் கல்லீரலை மேம்படுத்த உதவுகிறது
(2 / 7)
வில்வ இலைகளில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, வாயு பிரச்னை, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, மூல நோய் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் இந்த வில்வ இலை சாப்பிடுவதன் மூலம் பலனை பெறலாம்
(3 / 7)
வில்வ இலைகளில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே நீரழிவு நோயாளிகள் தினமும் காலையில் இதை உட்கொள்வதால் நல்ல பலனை பெறலாம்
(4 / 7)
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலமிளக்கியாகவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. குடலை பாதுகாக்கும் அருமருந்தாக செயல்படுகிறது
(5 / 7)
மூல நோய் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் இந்த வில்வ இலை சாப்பிடுவதன் மூலம் பலனை பெறலாம்
(6 / 7)
இதயத்தை பாதுகாப்பதில் வில்வ இலைகள் முக்கிய பங்காற்றுகிறது. இதில் பொட்டாசியம் நிறைந்து காணுப்படுவதால் மாரடைப்பு, இதய நோய்களின் பாதிப்பை தடுக்கிறது
மற்ற கேலரிக்கள்