Non-veg food: மீன், நண்டு, கருவாட்டை இந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.. ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Non-veg Food: மீன், நண்டு, கருவாட்டை இந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.. ஏன் தெரியுமா?

Non-veg food: மீன், நண்டு, கருவாட்டை இந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.. ஏன் தெரியுமா?

Feb 05, 2024 05:59 PM IST Karthikeyan S
Feb 05, 2024 05:59 PM , IST

  • கருவாடுகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும்.

கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது பற்றிய பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்வோம். 

(1 / 7)

கருவாடு சாப்பிடும் போதும் மீன், நண்டு உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது புட் பாய்சனை உண்டாக்கி விடும் என்கின்றனர்.

(2 / 7)

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் உப்பு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கருவாட்டில் உப்பு மிக அதிகமாக இருக்கும். எனவே இந்தப் பிரச்னை உள்ளவர்கள் கட்டாயம் கருவாட்டு உணவை தவிர்ப்பது நல்லது.

(3 / 7)

மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் வெண் மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதாம்.

(4 / 7)

சரும நோய் அல்லது ஒவ்வாவை பிரச்னை இருப்பவர்களுக்கும் கருவாடு ஆகாது. சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு கருவாடால் பல தொல்லைகள் ஏற்படக்கூடும். எனவே, கருவாட்டை தவிர்ப்பது உடல் நலத்திற்கு சிறந்தது.

(5 / 7)

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது.

(6 / 7)

இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், தோல் நோயாளிகள், செரிமானச் சிக்கல் மிக்க நோயாளிகள், கடும் நீரிழிவு நோயாளிகள், அமிலத்தன்மை உடலில் அதிகமுள்ள நோயாளிகள் உள்ளிட்ட சிலவகை நோயாளிகள் தவிர, மற்றவர்கள் கருவாடு உட்கொள்வது நன்மையே தரும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்