Career Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ சொந்த தொழிலில் வெற்றி யாருக்கு? இதோ அந்த 4 விதிகள்!
- Career Horoscope: ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, தன அதிபதி, லாப அதிபதி, ஜீவனாதிபதி மற்றும் குரு பகவான் ஆகியோர் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 நிலைகள் ஆவது கெடுப்போகாமல் இருந்து தசாபுத்திகள் ஒத்துழைப்பு தரும் போது ஜாதகர் தொழில் மூலம் மிகப்பெரிய செல்வந்தர் ஆக வாய்ப்புகள் உள்ளது.
- Career Horoscope: ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, தன அதிபதி, லாப அதிபதி, ஜீவனாதிபதி மற்றும் குரு பகவான் ஆகியோர் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 நிலைகள் ஆவது கெடுப்போகாமல் இருந்து தசாபுத்திகள் ஒத்துழைப்பு தரும் போது ஜாதகர் தொழில் மூலம் மிகப்பெரிய செல்வந்தர் ஆக வாய்ப்புகள் உள்ளது.
(1 / 7)
சொந்த தொழில் புரிந்து வாழ்வியலில் மேன்மை அடைய வேண்டுமென்ற எண்ணம் நிறைய ஜாதகர்களுக்கு உண்டு. மற்றவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரியும் அமைப்பை நிறைய பேர் விரும்புவது இல்லை. ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளை குறிக்கிறது. உதாரணமாக, புதன் வணிகம் மற்றும் தொடர்புகளை குறிக்கிறது. குரு வளர்ச்சியைக் குறிக்கிறது. சனி பொறுப்பு உணர்வையும் கடின உழைப்பையும் குறிக்கிறது. இந்த கிரகங்களின் நிலை மற்றும் அவற்றுக்கு இடையேயான கோணங்கள் ஒருவரின் தொழில் முனைவு திறன் மற்றும் வணிக வெற்றிக்கு காரணமாக இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
(2 / 7)
குறிப்பாக ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரமும் தொழில்முனைவு மற்றும் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ராசியும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது, அது ஒருவரின் தொழில்முனைவு பாணியை பாதிக்கிறது.
(3 / 7)
அதாவது சொந்த ஜாதகத்தில் லக்னாதிபதி வலுத்தவர்கள், 1, 5, 9 ஆம் அதிபதிகள் சக்திவாய்த இடத்தில் உள்ளவர்கள். லக்னத்தில் வலுவான கோள்கள் அமைய பெற்றவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களிடம் பணிந்து விரும்புவதில்லை. அப்படியே வேலை செய்தாலும் அவர்கள் அதிகாரம் மிக்க பதவிகளில் இருக்க நினைக்கின்றனர்.
(4 / 7)
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, தன அதிபதி, லாப அதிபதி, ஜீவனாதிபதி மற்றும் குரு பகவான் ஆகியோர் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 நிலைகள் ஆவது கெடுப்போகாமல் இருந்து தசாபுத்திகள் ஒத்துழைப்பு தரும் போது ஜாதகர் தொழில் மூலம் மிகப்பெரிய செல்வந்தர் ஆக வாய்ப்புகள் உள்ளது.
(5 / 7)
2ஆம் இடத்தை குறிக்கும் தன ஸ்தானம் ஆனது செல்வம், உடைமைகள், நிதி நிலைத்தன்மை, பணம் சம்பாதிக்கும் திறன், வள நிர்வாகம் உள்ளிட்டவற்றை குறிக்கின்றது. குரு பகவானை பொறுத்தவரை பகை, நீசம் பெற்று இருக்க கூடாது. சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் உடன் குரு பகவான் மிகவும் அருகாமையில் இணைந்து இருக்க கூடாது என்பது முக்கிய விதியாக உள்ளது.
(6 / 7)
அடுத்ததாக ஜீவனாதிபதி சென்று சொல்லக்கூடிய 10ஆம் வீட்டு அதிபதி பகை, நீசம், அஸ்தமனம் என்ற நிலையை அடைந்து இருக்க கூடாது. இந்த 10ஆம் இடம் ஆனது தொழில், நற்பெயர், பொது வாழ்க்கை, தொழில் வெற்றி, பொது அங்கீகாரம் மற்றும் வணிகத்தில் உயர் அந்தஸ்தை அடைவதை குறிக்கும் இடமாக உள்ளது.
மற்ற கேலரிக்கள்