BSP Armstrong murder: சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகளே இல்லை!’ குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்!
- BSP Chief Armstrong's Murder Case: இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிய, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது சரண் அடைந்து உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
- BSP Chief Armstrong's Murder Case: இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிய, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது சரண் அடைந்து உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
(1 / 7)
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
(2 / 7)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரது இல்லத்தின் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
(3 / 7)
அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வர், சமூக விரோத கும்பல்களின் இந்த செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏழை எளிய மக்களுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக சிறப்பான முறையில் பணியாற்றினார். பௌத்தத்தை பரப்புவதே இந்த மண்ணில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மாற்று அரசியல் என்பதை தொடர்ந்து உயர்த்தி பிடித்தவர். தன்னுடைய இல்லதிற்கு அருகே புதிய புத்த விகார்களை கட்டி உள்ளார் என கூறினார். (PTI)
(4 / 7)
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக சிறப்பான முறையில் பணியாற்றினார். பௌத்தத்தை பரப்புவதே இந்த மண்ணில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மாற்று அரசியல் என்பதை தொடர்ந்து உயர்த்தி பிடித்தவர். தன்னுடைய இல்லதிற்கு அருகே புதிய புத்த விகார்களை கட்டி உள்ளார் என கூறினார்.
(5 / 7)
செல்வி மாயாவதி அம்மையாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வந்தவர். நாளை காலை அவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செய்ய சென்னை வருகின்றார்.(PTI)
(6 / 7)
இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிய, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது சரண் அடைந்து உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. இந்த கொலையில் தொடர்புடையவர்கள், தூண்டிவிட்டவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும். சரண் அடைந்தவர்களை கைது செய்துவிட்டோம் என்ற அளவில், புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக் கூடாது. உண்மை குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும்.
(7 / 7)
பொதுமக்கள் பிரச்னைக்காக பல்வேறு நடவடிக்கைகளில் தலையிட்டு உள்ளார். அதனால் அவருக்கு முன் விரோதம் உண்டு. இது போலீஸ்க்கு நன்றாக தெரியும். அவருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும். அது அதிர்ச்சி அளிக்கின்றது. குற்றவாளிகளை கைது செய்வதிலாவது விழிப்பாக இருக்க வேண்டும், அதில் அவர்கள் அலட்சியமாக இருக்க கூடாது என திருமாவளவன் தெரிவித்து உள்ளார். (PTI)
மற்ற கேலரிக்கள்