Bonda Mani: கொடுத்த வாக்கை தவறிய அஜித்..மனம் நொந்து பேசிய போண்டா மணி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bonda Mani: கொடுத்த வாக்கை தவறிய அஜித்..மனம் நொந்து பேசிய போண்டா மணி

Bonda Mani: கொடுத்த வாக்கை தவறிய அஜித்..மனம் நொந்து பேசிய போண்டா மணி

Dec 24, 2023 09:10 AM IST Aarthi V
Dec 24, 2023 09:10 AM , IST

ஒரு மாதத்திற்கு முன், டேக் 1 யூடியூப் தளத்திற்கு மறைந்த காமெடி நடிகர் போண்டா மணி அளித்த உருக்கமான பேட்டி அளித்து இருந்தார்.

"சிகிச்சையில் தான் இருக்கிறேன். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கிறேன். சிகிச்சை போகிறது, கொஞ்சம் செலவாகும். ரஜினி சார் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். விஜய்சேதுபதி, தனுஷ் சார் கொஞ்சம் கொடுத்தாங்க. சக கலைஞனுக்கு ஒன்று என்றால் பலரும் உதவினார்கள். என் விசயம் கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்கு முதல் ஆளாக வந்து ஒரு லட்சம் ரூபாய் கையில் கொடுத்துச் சென்றது மயில்சாமி தான். அவர் இல்லாதது எனக்கு பெரிய இழப்பு. என் மனைவி மூலம் தான் ரஜினி சாருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தான். மறுநாளே அவரிடம் இருந்து பணம் வந்தது, ஆறுதல் வார்த்தைகளும் கூறினார்.

(1 / 5)

விஜய் சேதுபதி, தனுஷ் சார் எல்லாம் நான் கேட்காமலேயே கேள்விப்பட்டு எனக்காக உதவினார்கள். எனக்கு வருத்தம் என்னவென்றால், அஜித் சார் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். மைனர் மாப்பிள்ளை படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். அந்த படத்தில் அஜித் இணைய நானும் ஒரு காரணமாக இருந்தேன். ரஞ்சித் நடித்து பாதியில் நின்ற படம் அது; இன்னொரு ஹீரோவை சேர்க்கலாம் என்று இருந்தார்கள். நான் தான் அஜித் பெயரை கூறினேன். அப்போ அஜித் சாருக்கு எந்த பணத்தேவை இருந்தாலும், நான் தான் தயாரிப்பாளர் தரப்பில் பேசுவேன். 

(2 / 5)

‘நான் நன்றாக வரும் போது உனக்கு வாய்ப்பு தருவேன் மணி’ என்று அஜித் கூறினார். அதன் பின் ஏவிஎம்.,யில் ஒரு ஷூட்டில் இருக்கும் போது அஜித்தை சந்தித்தேன், ‘மணி, இப்போ தான் கொஞ்சம் தவந்து வந்துட்டு இருக்கேன்’ என்று அஜித் கூறினார். ‘பரவாயில்லை, நீ நல்லா இருக்கியானு பார்க்க தான் வந்தேன்’ என்று கூறினேன். அதன் பின் சிட்டிசன் படப்பிடிப்பின் போது பிரசாத் ஸ்டூடியோவில் போய் பார்த்தேன். ‘இல்ல மணி.. இயக்குனர் சரவண சுப்பையா.. நான் சொன்னா எடுக்க மாட்டாரு.. அடுத்த படத்துல பார்க்கலாம்’ என்று அஜித் சொன்னார். நானும் வந்துவிட்டேன். 

(3 / 5)

மறுநாள் இயக்குனர் சரவண சுப்பையா சார் போன் போட்டு அழைத்தார், போனேன். ‘என்ன அஜித் உனக்கு நண்பரா?’ என்று கேட்டார், விபரத்தை சொன்னேன். ‘இப்போ என்ன, அஜித் என்னை கூப்பிட்டு சொல்லிட்டாரா? என்னிடம் கேட்க வேண்டியது தானே?’ என்று சரவண சுப்பையா கேட்டார். ‘இல்ல சார் அவர் கொஞ்சம் பிஸியான ஆர்டிஸ்ட்.. சொல்லலைனா பரவாயில்லை சார்..’ என்றேன்.

(4 / 5)

விஜய்யுடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். இலங்கை தமிழர் என்பதால், என் மீது அவருக்கு விருப்பம் உண்டு. ஆனால், எனக்கு அவரும் உதவவில்லை. மக்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை; ஆனாலும் என் மனதில் ஒன்று வைத்திருக்கிறேன். சாவை யாராலும் தடுக்க முடியாது; ‘பிறப்பு, இறப்பு, நடுவுல கொஞ்சம் கேப்’ இதில் தான் நாம ஆடுறோம். அவன் ஸ்விட்ச்சை ஆப் பண்ணிட்டா, நாம போய் சேரணும். இதை தான் மயில்சாமி, இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் என்னிடம் சொன்னார்,’’ என்று கூறியிருந்தார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்