தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Bjp West Bengal Basirhat Lok Sabha Candidate Mohammad Shami Sources Says Read More

Mohammad Shami: மக்களவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை பாஜக வேட்பாளராக களமிறக்க பாஜக முடிவு?

Mar 09, 2024 09:39 AM IST Manigandan K T
Mar 09, 2024 09:39 AM , IST

  • Lok Sabha Candidate Mohammad Shami: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்றார். அப்போது, இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமியை மோடி ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

முகமது ஷமி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர், ஆனால் பெங்கால் அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். இவரது சகோதரரும் பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மேற்கு வங்கத்தின் பசிர்ஹாட் தொகுதியில் ஷமியை களமிறக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாக இந்தியா டுடே செய்தியில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஷமியிடம் பாஜக தலைமை ஆலோசனை நடத்தியுள்ளதாகவும். ஆனால், இதுகுறித்து ஷமி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(1 / 5)

முகமது ஷமி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர், ஆனால் பெங்கால் அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். இவரது சகோதரரும் பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மேற்கு வங்கத்தின் பசிர்ஹாட் தொகுதியில் ஷமியை களமிறக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாக இந்தியா டுடே செய்தியில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஷமியிடம் பாஜக தலைமை ஆலோசனை நடத்தியுள்ளதாகவும். ஆனால், இதுகுறித்து ஷமி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது ஷமி தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.  அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஷமியே ஒரு போட்டோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். ஷமியின் சமூக ஊடக பதிவை மோடி பகிர்ந்துள்ளார். ஷமி விரைவில் குணமடைய மோடி வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையில், ஷமி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. இந்த சூழலில் அவர் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில், ஷமியை கட்சியில் சேர்க்க பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது.

(2 / 5)

முகமது ஷமி தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.  அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஷமியே ஒரு போட்டோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். ஷமியின் சமூக ஊடக பதிவை மோடி பகிர்ந்துள்ளார். ஷமி விரைவில் குணமடைய மோடி வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையில், ஷமி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. இந்த சூழலில் அவர் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில், ஷமியை கட்சியில் சேர்க்க பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது.(ANI)

முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். உங்கள் காயம் விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன். இந்த கடினமான நேரத்தை நீங்கள் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷமி, "பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எனக்காக எழுதியுள்ளார். நான் விரைவில் குணமடைய அவர் வாழ்த்தினார். அவரது செய்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி மோடி சார். விரைவில் குணமடைய முயற்சிக்கிறேன். ' 

(3 / 5)

முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். உங்கள் காயம் விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன். இந்த கடினமான நேரத்தை நீங்கள் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷமி, "பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எனக்காக எழுதியுள்ளார். நான் விரைவில் குணமடைய அவர் வாழ்த்தினார். அவரது செய்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி மோடி சார். விரைவில் குணமடைய முயற்சிக்கிறேன். ' (PTI)

சமீபத்தில், ராமர் கோயில் குறித்தும், ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் குறித்தும் ஷமி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர், "ராமர் கோயில் கட்டப்பட்டால், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்வதில் என்ன ஆட்சேபனை? ஆயிரம் முறை சொல்லுங்கள். அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டுமென்றால் ஆயிரம் முறை சொல்வேன். அதில் என்ன தவறு இருக்கிறது?"  என்றார்.

(4 / 5)

சமீபத்தில், ராமர் கோயில் குறித்தும், ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் குறித்தும் ஷமி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர், "ராமர் கோயில் கட்டப்பட்டால், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்வதில் என்ன ஆட்சேபனை? ஆயிரம் முறை சொல்லுங்கள். அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டுமென்றால் ஆயிரம் முறை சொல்வேன். அதில் என்ன தவறு இருக்கிறது?"  என்றார்.(Shrikant Singh)

சந்தேஷ்காலி பசிர்ஹாட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இதற்கிடையே, பசிர்ஹாட் தொகுதியில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த பின்னணியில், இந்த தொகுதியில் சந்தேஷ்காலி மற்றும் சிறுபான்மை வேட்பாளர்களின் வாக்குகளை திரட்ட பாஜக திட்டமிட்டுள்ளது. இருப்பினும், ஷமி இறுதியாக ஒரு வேட்பாளராக ஒப்புக்கொள்வாரா என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் அவர் இன்னும் ஒரு கிரிக்கெட் வீரராக சுறுசுறுப்பாக இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்ட பிறகு இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து தொடர்ந்து விளையாட விரும்புகிறார். இந்த சூழலில், அவர் தீவிர அரசியலில் நுழைய விரும்புகிறாரா என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.   

(5 / 5)

சந்தேஷ்காலி பசிர்ஹாட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இதற்கிடையே, பசிர்ஹாட் தொகுதியில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த பின்னணியில், இந்த தொகுதியில் சந்தேஷ்காலி மற்றும் சிறுபான்மை வேட்பாளர்களின் வாக்குகளை திரட்ட பாஜக திட்டமிட்டுள்ளது. இருப்பினும், ஷமி இறுதியாக ஒரு வேட்பாளராக ஒப்புக்கொள்வாரா என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் அவர் இன்னும் ஒரு கிரிக்கெட் வீரராக சுறுசுறுப்பாக இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்ட பிறகு இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து தொடர்ந்து விளையாட விரும்புகிறார். இந்த சூழலில், அவர் தீவிர அரசியலில் நுழைய விரும்புகிறாரா என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.   (PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்