‘ஒரே போன் கால்.. 17 லட்சம் அபேஸ்.. அவன் மட்டும் கையில கிடைச்சான்.. துண்டு துண்டா’ - அப்பாதான் எனக்கு எல்லாமே’- சவுண்ட்!
வாழ்க்கையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே எனக்கு குழப்பமாக இருந்தது. சினிமா என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஜுனியர் நடிகராகத்தான் நான் இந்தத்திரைத்துறைக்குள் நுழைந்தேன். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்துருக்கிறேன். - சவுண்டின் சோகக்கதை!
(1 / 6)
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், நேற்றைய தினம் கதை சொல்லல் டாஸ்க் நடந்தது. அதில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் கடந்த வந்த பாதை குறித்து பேசினர். அந்த வரிசையில் போட்டியாளராக உள்ளே இருக்கும், செளந்தர்யா தன் கதையை எமோஷனலாக பகிர்ந்து கொண்டார்.குரலால் நடந்த கிண்டல்அவர் பேசும் போது, “ நான் கடந்த வந்த பாதையை சொல்வதே எனக்கு பெரும் கனவாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நான் அவ்வளவு காலம் காத்திருந்து இருக்கிறேன். காரணம் செளந்தர்யா யார் என்பதை வெளியே சொல்ல வேண்டும் என்ற தவிப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. சின்ன வயதில் இருந்தே என்னுடைய குரல் இப்படித்தான் இருக்கும்.
(2 / 6)
பள்ளியில் இருந்தே என்னுடைய குரல் சார்ந்த கிண்டலை நான் எதிர்கொண்டு வந்திருக்கிறேன். பலர், இப்படிப்பட்ட ஒரு பொண்ணுக்கு, இப்படிப்பட்ட குரலா என்று குறையாக பார்த்தார்கள். அதனால் என்னுடைய குரலை வைத்துக்கொண்டு பேசுவதே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
(3 / 6)
ஒரே போன் காலில் காலிஅதனால், வாழ்க்கையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே எனக்கு குழப்பமாக இருந்தது. சினிமா என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஜுனியர் நடிகராகத்தான் நான் இந்தத்திரைத்துறைக்குள் நுழைந்தேன். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்துருக்கிறேன்.
(4 / 6)
கிட்டத்தட்ட 8 வருடங்களாக இந்தத்திரைத்துறையில் உழைத்து 17 லட்சம் சம்பாதித்து இருந்தேன் ஆனால் அது ஒரே போன்காலில் காலியாகிவிட்டது. ஆம், மோசடி முறையில் யாரோ அந்தப்பணத்தை அப்படியே சுருட்டி விட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு கூட நான் என்னுடைய அப்பாவிடம் கடன் வாங்கிதான் வந்தேன்.
(5 / 6)
இந்த சம்பவம் கடந்த மாதம்தான் நடந்தது. அதன் காரணமாக, நான் அவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் சிக்கினேன்.
மற்ற கேலரிக்கள்