Deepam Worship: தடைகள் அனைத்தும் விலக வேண்டுமா? - தீப பரிகாரம் செய்து பாருங்க..!
- Deepam Worship: தடைகள் அனைத்தும் விலக எளிமையான தீப பரிகார பூஜை பற்றி இங்கு காண்போம்.
- Deepam Worship: தடைகள் அனைத்தும் விலக எளிமையான தீப பரிகார பூஜை பற்றி இங்கு காண்போம்.
(1 / 6)
கோயில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. அதேபோல், நம்முடைய வீடுகளில் இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி வழிபாடு செய்வது மிகச்சிறந்ததாகும்.
(2 / 6)
பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் தீபம் ஏற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் நல்ல பலன்களை கொடுக்கும். (Pexels)
(3 / 6)
6 அகல் விளக்குகளில் சுத்தமான பசு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் ஒவ்வொரு விளக்கிலும் நெய்யுடன் குங்குமப்பூவும் சேர்த்து எரிய விட வேண்டும். அப்படி எரியும் போது வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இந்த விளக்கு பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்ய வேண்டும்.(Pexels)
(4 / 6)
தீபம் ஏற்றும் போது ஏதாவது ஒரே ஒரு வேண்டுதலை நினைத்து அது நிறைவேற வேண்டும் என வேண்டி தீபத்தை ஏற்ற வேண்டும். நினைத்த காரியம் தடை இல்லாமல் 6 வாரத்திற்குள் நிறைவேறி விடும். அப்படி அந்த காரியம் நிறைவேறியதும், அடுத்த வேண்டுதலை முன் வைத்து மீண்டும் தீபத்தை ஏற்றலாம். (Pexels)
(5 / 6)
தொடர்ந்து தடைகளை சந்திப்பவர்கள் ஒளவையார் அருளிய 'விநாயகர் அகவல்' என்ற அற்புதமான நூலை தினமும் படித்து வரலாம். தொடர்ந்து 48 நாட்கள் இதை படித்து வந்தால் தடைகள் அனைத்தும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. (Pexels)
மற்ற கேலரிக்கள்