T20 World Cup: உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு! ஜெய்ஷா அதிரடி!
- T20 World Cup: இந்திய அணியின் சிறப்பான பங்களிப்புகாக 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.
- T20 World Cup: இந்திய அணியின் சிறப்பான பங்களிப்புகாக 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.
(1 / 7)
T20 World Cup: உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது(ICC- X)
(2 / 7)
2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 சர்வதேச சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றதற்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. (Hindustan Times)
(3 / 7)
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, ஷிவம் துபே 27 ரன்கள் அடித்தனர்.(ICC- X)
(4 / 7)
177 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன், இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.(T20 Instagram)
(5 / 7)
இந்த நிலையில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா அறிவித்து உள்ளார். (ANI )
(6 / 7)
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ”பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா, ICC ஆடவர் T20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அயைணிக்கு 125 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்து உள்ளார். (ANI )
மற்ற கேலரிக்கள்