Bayilvan ranganathan: வழக்குகள் பல.. கோட்டைத்தாண்டிய கோச்சடையான் பிரச்சினை..லதா ரஜினியின் உண்மை முகம் - பயில்வான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bayilvan Ranganathan: வழக்குகள் பல.. கோட்டைத்தாண்டிய கோச்சடையான் பிரச்சினை..லதா ரஜினியின் உண்மை முகம் - பயில்வான்!

Bayilvan ranganathan: வழக்குகள் பல.. கோட்டைத்தாண்டிய கோச்சடையான் பிரச்சினை..லதா ரஜினியின் உண்மை முகம் - பயில்வான்!

Dec 31, 2023 08:30 PM IST Kalyani Pandiyan S
Dec 31, 2023 08:30 PM , IST

கோச்சடையான் படத்தின் தயாரிப்பு பணிகளுக்கு உதவிட, அதன் தயாரிப்பாளர்களில் ஒருவருக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறி கையெழுத்து போட்டார் லதா ரஜினிகாந்த். ஆனால் அவரோ, பணத்தை வாங்கியவருக்கு சரிவர பணம் கொடுக்காமல் டாட்டா காட்ட, பிரச்சினை லதா ரஜினிகாந்தின் தலையில் விழுந்து விட்டது.

கோச்சடையான் படத்தின் தயாரிப்பு பணிகளுக்கு உதவிட, அதன் தயாரிப்பாளர்களில் ஒருவருக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறி கையெழுத்து போட்டார் லதா ரஜினிகாந்த். ஆனால் அவரோ, பணத்தை வாங்கியவருக்கு சரிவர பணம் கொடுக்காமல் டாட்டா காட்ட, பிரச்சினை லதா ரஜினிகாந்தின் தலையில் விழுந்து விட்டது.  இந்த பிரச்சினை வழக்காக மாற, பெங்களூர் நீதிமன்றத்தில் அண்மையி ஆஜரான லதா முன் ஜாமீன் பெற்று வந்தார்.  இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சக்தி சினி நியூஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி அளித்திருக்கிறார்.  . 

(1 / 5)

அந்த பேட்டியில், “  கோச்சடையான் படத்தின் போது முரளி என்பவருக்கு கடன் கொடுக்க உத்திரவாதம் கொடுத்து லதா ரஜினிகாந்த் கையெழுத்து போட்டார். படம் கடுமையான நஷ்டத்தை சந்தித்து விட்டது. இதனையடுத்து  முரளி டிமிக்கி கொடுத்து விட்டு சென்று விட,  கடன் கொடுத்தவர் லதா ரஜினிகாந்த் பிடித்துக் கொண்டார். ஆனால் லதா ரஜினிகாந்த் பணம் தர ஒப்புக் கொள்ளாத நிலையில் அவர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்.  

(2 / 5)

நீதிமன்றத்தில் இந்த வழக்கு பத்து வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக லதா ரஜினிகாந்திடம் நீதிமன்றம் பலமுறை கூறியும், அதை சட்டை செய்யாமல் தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் லதா ரஜினிகாந்த். இதையடுத்து அவர் மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது இதனையடுத்து அண்மையில் இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.. அவர் ஆஜராக வந்த பொழுது முக்காடு போட்டுக் கொண்டு வந்தார். இதனை பெங்களூர் பத்திரிகைகள் லதா ரஜினிகாந்த் முக்காடு போட்டு வந்ததாக எழுதினார்கள்.   

(3 / 5)

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நான் பயந்து முக்காடு போட்டுச் செல்லவில்லை. வெயிலின் தாக்கம் காரணமாகவே முக்காடு போட்டு சென்றேன் என்று கூறினார். கிட்டத்தட்ட வெறும் ஆறு கோடிக்காக தான் இவ்வளவு காலம் இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. 6 கோடியை மிகவும் சுலபமாக லதா ரஜினிகாந்தால் கொடுத்து விட்டு சென்று விட முடியும். ஆனால் செய்ய மறுக்கிறார். இது போன்று லதா ரஜினிகாந்த் மீது பல வழக்குகள் இருக்கின்றன.    

(4 / 5)

தேனாம்பேட்டையில் ரஜினிகாந்த் ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடை வைத்திருந்தார். அந்த பில்டிங்கிருக்கு இவர்கள் வாடகை கொடுக்கவில்லை அது ஒரு வழக்காக மாறியது. ரஜினிகாந்த் கல்யாண மண்டபத்திற்கு முறையாக வரி கட்டவில்லை. அது ஒரு வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளியில் பணி புரியும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். இப்படி லதா ரஜினிகாந்த் பல வேலைகளை செய்திருக்கிறார். இவையெல்லாம் யாருக்கு கெட்ட பெயர் ரஜினிகாந்த்துக்கு தான் கெட்ட பெயர். தன்னுடைய கணவர் முன்னேறுவதற்கு ஒரு ஏணியாக இருக்க வேண்டுமே, தவிர அவரை அதிலிருந்து கீழே இறக்கக்கூடாது. ஆனால் அதைத்தான் நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு தேவைதானா…? என்று பேசினார்

(5 / 5)

மற்ற கேலரிக்கள்