Ban on Ferocious Dogs: செல்ல பிராணிகள் பிரியர்களே உஷார்! இந்த நாய் இனங்களை வீட்டில் வளர்க்க தடை - முழு லிஸ்ட் இதோ
- மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், கொடூரமாக செயல்படக்கூடிய சில நாய்கள் இனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டிருக்கும் நாய் இனங்கள் எவை என்பதை பார்க்கலாம்
- மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், கொடூரமாக செயல்படக்கூடிய சில நாய்கள் இனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டிருக்கும் நாய் இனங்கள் எவை என்பதை பார்க்கலாம்
(1 / 5)
சில கொடூர இன நாய்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், விற்பனை செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. பல சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ராட்வீலர், பிட்புல்ஸ், டெரியர், ஓநாய் நாய்கள், மாஸ்டிஃப் உள்ளிட்ட பல்வேறு வகையான கொடூரமான நாய்களை செல்லப்பிராணிகளாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது(HT_PRINT)
(2 / 5)
பிட்புல்ஸ் பற்றி பல புகார்கள் உள்ளன. இந்த நாய் இனத்தால் மனிதர்கள் காயமடைந்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் இதன் விற்பனைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதுபோன்ற கொடூரமான நாய்களை வீட்டில் வளர்ப்பதில் பல பிரச்னைகள் உள்ளன.
(3 / 5)
இந்த நாய்களால் பராமரிப்பாளர், வளர்ப்பாளர், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சில சமயங்களில் பிரச்னை ஏற்பட நேரிடும். அத்துடன் இந்த நாய் இனங்களை தெருக்களில் வாக்கிங் அழைத்து செல்வதிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த நாயுடன் வேறு எந்த இன நாய்களையும் இனப்பெருக்கம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது
(4 / 5)
ஆபத்துகளை ஏற்படுத்தும் இதுபோன்ற நாய்களை வளர்ப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் உள்ளாட்சி நிர்வாகம் உரிமம் வழங்கக்கூடாது என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற நாய்களை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் கருத்தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இனி இந்த நாய் இனங்கள் குட்டிகளை ஈன்றாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மற்ற கேலரிக்கள்