Astrology Insights: ’மேஷம் முதல் மீனம் வரை…!’ பட்டம், பதவி, கௌரவம், அந்தஸ்து தரும் 10ஆம் வீட்டின் ரகசியங்கள்!
- Astrology Insights: ஒரு ஜாதகத்தில் வலுவான கோள்கள் அமர்ந்தால் அல்லது பத்தாம் இடத்தில் அதிக கோள்கள் அமர்ந்தால் ஜாதகர் வெற்றியாளர் ஆக விளங்குவார். பத்தில் ஓர் பாவி கிரகம் ஆனது அமர்வது நன்று. இல்லை எனில் 10ஆம் வீட்டை வேறு கிரகங்கள் பார்க்க வேண்டும் அல்லது 10ஆம் அதிபதி வலுவாக இருக்க வேண்டும்.
- Astrology Insights: ஒரு ஜாதகத்தில் வலுவான கோள்கள் அமர்ந்தால் அல்லது பத்தாம் இடத்தில் அதிக கோள்கள் அமர்ந்தால் ஜாதகர் வெற்றியாளர் ஆக விளங்குவார். பத்தில் ஓர் பாவி கிரகம் ஆனது அமர்வது நன்று. இல்லை எனில் 10ஆம் வீட்டை வேறு கிரகங்கள் பார்க்க வேண்டும் அல்லது 10ஆம் அதிபதி வலுவாக இருக்க வேண்டும்.
(1 / 8)
பத்தாம் இடம் என்பது பட்டம், பதவி, கௌரவம், அந்தஸ்து ஆகியவைகள் உடன் தொடர்பு உடையது. இதனை கர்ம ஸ்தானம் என்றும் குறிப்பிடுகின்றனர். நமது கர்மா எந்த வழியில் ஆனது என்பதை தீர்மானிக்கும் இடமாக இது உள்ளது.
(2 / 8)
ஒரு ஜாதகத்தில் முழுமுதற் திரிகோணம் ஆக 9ஆம் இடம் உள்ளது. முழுமுதற் கேந்திரம் ஆக 10ஆம் வீடு உள்ளது. திரிகோணங்கள் வலுத்த ஜாதகர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 1, 5, 9ஆம் வீட்டு அதிபதிகளில் யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் அடைந்து இருப்பது ஒருவரை பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலிகளாக மாற்றும்.
(3 / 8)
கேந்திரங்க என்று சொல்லக்கூடிய 4, 7, 10ஆம் இடங்கள் முழுக்க முழுக்க மனிதனின் திறமைகளால் கட்டமைக்க கூடியது ஆகும். இது தனிநபர் ஒருவரின் தனித்திறமை, கடும் உழைப்பு, முயற்சிகளை குறிக்கும் இடம் ஆகும்.
(4 / 8)
கர்மா உங்களுக்கு உதவக்கூடிய இடமாக இந்த 10ஆம் இடம் உள்ளது. 10ஆம் வீட்டில்தான் ஒருவருக்கு கிடைக்க கூடிய புகழ், கௌரவம், பட்டம், பதவி, சமுதாய மரியாதை ஆகியவை கிடைக்கும். ஒருவர் குலதெய்வத்துக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய பத்தாம் இடம் வலுபெற்று இருக்க வேண்டும். இல்லை எனில் பத்தாம் அதிபதி ஆனவர் ஐந்தாம் இடத்தில் சென்று அமர வேண்டும்.
(5 / 8)
ஒரு ஜாதகத்தில் வலுவான கோள்கள் அமர்ந்தால் அல்லது பத்தாம் இடத்தில் அதிக கோள்கள் அமர்ந்தால் ஜாதகர் வெற்றியாளர் ஆக விளங்குவார். பத்தில் ஓர் பாவி கிரகம் ஆனது அமர்வது நன்று. இல்லை எனில் 10ஆம் வீட்டை வேறு கிரகங்கள் பார்க்க வேண்டும் அல்லது 10ஆம் அதிபதி வலுவாக இருக்க வேண்டும்.
(6 / 8)
ஒருவருக்கு லக்னத்திற்கு 10ஆம் இடம் வலுப்பெற்று இல்லை என்றாலும், ராசிக்கு 10ஆம் இடம் வலுப்பெற்று இருக்க வேண்டும். லக்னத்துக்கு பத்தாம் இடமோ அல்லது ராசிக்கு பத்தாம் இடமோ வலிமையாக இருந்தால் பதவியும், பட்டமும் உங்களை தேடி வரும்.
(7 / 8)
குறைந்தபட்சம் மூன்று கிரகங்களாவது பத்தாம் இடத்தில் இருக்க பிறந்தவர்கள் தனது முயற்சியினாலும் செய்கைகளாலும் செயல்களாலும் கடும் உழைப்பினாலும் உயரத்தை அடைந்தே தீருவார்கள். வீட்டில் அமர்ந்த கிரகங்களின் தசைகள் சரியான பருவத்தில் வந்தால் முழு வெற்றிகள் கிட்டும்.
மற்ற கேலரிக்கள்