உடல் எடை குறைப்பு முயற்சியில் இருக்கிறீர்களா? டயட், உடற்பயிற்சி தவிர இந்த நான்கு விஷயங்களும் முக்கியம்! என்னன்னு பாருங்க
- Weight loss Tips: பலர் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், உடல் எடையை குறைக்க விரும்புவோர், தங்களைத் தாங்களே நான்கு கேள்விகளைக் கேட்டுக்கொள்வதும் மிகவும் முக்கியம். அப்படி என்ன கேள்விகள் அது என்பதை விவரமாக பார்க்கலாம்
- Weight loss Tips: பலர் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், உடல் எடையை குறைக்க விரும்புவோர், தங்களைத் தாங்களே நான்கு கேள்விகளைக் கேட்டுக்கொள்வதும் மிகவும் முக்கியம். அப்படி என்ன கேள்விகள் அது என்பதை விவரமாக பார்க்கலாம்
(1 / 7)
உடல் எடையைக் குறைக்க எப்படி உடற்பயிற்சி செய்வது மற்றும் என்ன மாதிரியான உணவு கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் என்பது பலருக்கு தெரியும். எடைகுறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இதை முறையாக பின்பற்றவில்லை என்றால் எடையைக் குறைப்பு முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம்
(2 / 7)
உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை செய்வதற்கு முன் நான்கு கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்
(3 / 7)
இந்த நான்கு கேள்விகளுக்கும் சரியாகவும், நேர்மையாகவும் பதில் அளிப்பது மூலம் உடல் எடையை எதிர்பார்த்த வகையில் குறைக்க உதவிகரமாக இருக்கும்
(4 / 7)
பசி உணர்வு ஏற்படுகிறதா? பல சமயங்களில் பசி இல்லாவிட்டாலும் அடிக்கடி உணவு உண்கிறோம். இதற்கு காரணமாக மன அழுத்தம், சலிப்பு போன்றவற்றுடன் மற்றவர்களுக்கு கம்பெனி கொடுப்பது போன்ற வேடிக்கையான காரணங்களும் அடங்கும். சில சமயங்களில் பசிக்காவிட்டாலும் இந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற காரணத்துக்காகவும் சாப்பிடுவதுண்டு. நிஜமாகவே உங்களுக்கு பசி இல்லை என்று நீங்கள் நினைத்தால், உணவு சாப்பிடுவதை தவிர்த்து, ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் வரை காத்திருக்கவும். சாப்பிடும் ஆசை குறைக்கும். நாள் முழுவதும் சிற்றுண்டி கொரிப்பது உங்களின் கலோரி அளவை அதிகரிக்கபதோடு எடை குறைப்பு முயற்சியை தடுக்கலாம்
(5 / 7)
ஊட்டச் சத்து உணவை சாப்பிடுகிறோமா?: உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு ஊட்டச்சத்து உணவு அவசியம். நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அப்படி இருக்கையில் நாம் சாப்பிடும் உணவு ஒவ்வொன்றிலும் இந்த சத்துக்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். உணவில் ஊட்டச்சத்து அளவு சரியாக இருப்பதாக உணர்ந்தால் மட்டுமே இதை சாப்பிடுங்கள்
(6 / 7)
இவ்வளவு உணவு சாப்பிட முடியுமா?: சத்துக்களுடன் கூடிய குறைந்த அளவு உணவை உட்கொள்ள வேண்டும். அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக அளவு உணவை உட்கொள்வது கலோரிகளை அதிகரிக்கும். இவ்வளவு சாப்பிடுவது அவசியமா? என்று கேட்க வேண்டும். இந்தக் கேள்வியைக் கேட்பது உங்களுக்கு எவ்வளவு சாப்பிடுவது சரியாக இருக்கும் என்பதற்கு உதவும்
(7 / 7)
ஆரோக்கியமான உணவா?: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நொறுக்குத் தீனி, துரித உணவு, பொரித்த உணவுகள் மற்றும் இனிப்புகளை தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகளை சாப்பிடும்போது, ஆரோக்கியமான உணவா? என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இதனால் இதுபோன்ற ஆரோக்கியமற்ற, உடல் எடையை அதிகரிக்க செய்யும் உணவுகள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தலாம்
மற்ற கேலரிக்கள்