Ajith Kumar: தன்னைப்பற்றி தவறாக பேசிய டிரைவர்.. தூக்கி எறிந்த அஜித்!- ரோஷம் பாசமான கதை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ajith Kumar: தன்னைப்பற்றி தவறாக பேசிய டிரைவர்.. தூக்கி எறிந்த அஜித்!- ரோஷம் பாசமான கதை!

Ajith Kumar: தன்னைப்பற்றி தவறாக பேசிய டிரைவர்.. தூக்கி எறிந்த அஜித்!- ரோஷம் பாசமான கதை!

Aug 30, 2023 05:30 AM IST Kalyani Pandiyan S
Aug 30, 2023 05:30 AM , IST

அஜித் தன்னுடைய டிரைவருக்கு உதவிய நெகிழ்ச்சியான கதை இங்கே!

நடிகர் அஜித் வீட்டில் கார் டிரைவராக ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அஜித் வீட்டில் இருக்கிறார் என்பதை அறியாமல் ஒருவரிடம் அவர் அஜித்தை பற்றி தவறாக பேசி விட்டார். இது அஜித்திற்கு தெரிந்துவிட்டது. இதனையடுத்து அஜித் அவருக்கு ஆறு மாத சம்பளத்தை கொடுத்து வேலையை விட்டு அனுப்பிவிட்டார். இதனையடுத்து அவரும் வேலை விட்டு சென்று விட்டார். 

(1 / 4)

இந்த நிலையில் ஒரு நாள் காவல் நிலையத்திலிருந்து அஜித்திற்கு போன் வருகிறது. அதில், அஜித் வேலையை விட்டு அனுப்பிய நபர் அங்கிருப்பதாகவும் அவர் வாங்கியக்கடனை முறையாக  திருப்பிச் செலுத்தாததால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்திருப்பதாகவும் சொல்லி இருக்கின்றனர். உடனே அஜித் மேனேஜரை கூப்பிட்டு அது என்ன விஷயம் என்று பார்க்கச் சொல்லி இருக்கிறார். 

(2 / 4)

விசாரித்த போது நடிகர் அஜித்திடம் வேலை பார்க்கும் சமயத்தில் நமக்கு சம்பளம் வருகிறது.. எப்படியும் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணி அந்தக்கடனை அவர் வங்கியில் வாங்கி இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அஜித்திடம் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர் வேலையை விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. 

(3 / 4)

இதனையடுத்து வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் காவல்நிலையம் வரை வந்தது தெரியவந்தது. இதனைக்கேள்விப்பட்ட அஜித் அவர் வாங்கிய கடனான ஏழு லட்சம் ரூபாயையும் அவரே கட்டியிருக்கிறார்.  இது குறித்து அஜித் பேசும் போது, என்னைப் பற்றி தவறாக பேசியதால் நான் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டேன். ஆனால் அவர் என்னை நம்பி கடன் வாங்கி இருக்கிறார். அப்படியானால் அந்த கடனுக்கு நான் தான் பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார்.  

(4 / 4)

மற்ற கேலரிக்கள்