தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Peyarchi 2024: 12 ஆண்டுகளுக்குப் பின் அதிகரிக்கும் குருவின் அருளால் வங்கியில் இருப்பு உயரப்போகும் ராசிகள்?

Guru Peyarchi 2024: 12 ஆண்டுகளுக்குப் பின் அதிகரிக்கும் குருவின் அருளால் வங்கியில் இருப்பு உயரப்போகும் ராசிகள்?

Apr 19, 2024 02:39 PM IST Marimuthu M
Apr 19, 2024 02:39 PM , IST

Guru Peyarchi 2024: 2024ஆம் ஆண்டில் குரு பகவான் ராசியை மாற்றப் போகிறார். இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு குருவின் அருள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

குரு பகவானின் பெயர்ச்சியால் ஒருவருக்கு திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழில் ஆகியவற்றில் ஒருவர் சிறந்து விளங்கக் கூடும். மேலும் குரு பகவானின் அருளால் நல்ல வாழ்க்கைத்துணை, எதிர்பார்த்த சந்ததி, எதிர்பாராத அதிர்ஷ்டம், பணவரவு மற்றும் இறை நம்பிக்கை ஆகியவை கிடைக்கும். 

(1 / 7)

குரு பகவான் மே 1, 2024அன்று மதியம் 01:50 மணிக்கு ரிஷப ராசியில் நுழைவார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிகழ்வு நடக்கிறது. சுமார் 12 மாதங்கள் குரு பகவான் ரிஷப ராசியில் தங்கியிருப்பார். குரு பகவான், மீண்டும் அதே ராசிக்கு திரும்ப 12 ஆண்டுகள் ஆகும்.

(2 / 7)

இந்த குரு பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். அப்படி நல்லதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம். 

(3 / 7)

மேஷம்: ரிஷப ராசியில் குருவின் பெயர்ச்சியால், மேஷ ராசியினருக்கு சில சாதகமான சூழல் உண்டாகும். குரு பகவான் உங்கள் இரண்டாம் வீட்டை ஆக்கிரமிப்பது, அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதிசெய்கிறது. உங்கள் வியாபாரத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பல நேரங்களில் திடீர் செல்வம் கிடைக்கும். இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் படிப்படியாக குறையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்து கிடைக்கும் மற்றும் சுபசெய்திகள் வந்து சேரும். திருமண வரன் தேடும் நபர்களுக்கு, ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடும் முயற்சிகள் பலனளிக்கும்.

(4 / 7)

கடகம்: குரு பகவான் கடக ராசிக்காரர்களுக்கு 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் வருமானம் அதிகரிக்கும். பணத்தின் அடிப்படையில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் செய்து தொழிலைப் பெருக்குவீர்கள். இது நீண்டகால நோக்கில் லாபகரமானதாக மாறும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.

(5 / 7)

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளது. குருவின் சாதகமான செல்வாக்கின் காரணமாக, சிம்மராசியினர் வருமானத்தை இக்காலத்தில் அதிகம் சம்பாதிப்பர். காதல் விவகாரங்களில், உங்கள் உறவு பலப்படும். நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையை திருமணம் செய்து கொள்வீர்கள். அரசு வேலைக்குப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்