Actress Vindhya: “பச்சை பச்சையாக கேட்ட திமுக தலைவர்; அதிமுகவில் அட்டைப்போல ஒட்டிய விந்தியா; காரணம் தெரியுமா?
Actress Vindhya: யார் மக்கள் பிரச்சினைகளை பேசுகிறார்களோ, யார் உண்மைகளை உரக்கச் சொல்கிறார்களோ, அவர்களுக்கு மதிப்பளித்து, மக்கள் தங்களுடைய வாக்கை அளிப்பார்கள் என்பது புரிந்தது- விந்தியா!
(1 / 6)
Actress Vindhya: “பச்சை பச்சையாக கேட்ட திமுக தலைவர்; அதிமுகவில் அட்டைப்போல ஒட்டிய விந்தியா; காரணம் தெரியுமா?
(2 / 6)
திமுகவினால்தான் தான் தமிழ் கற்றுக்கொண்டேன் என்று நடிகை விந்தியா குமுதா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.இது குறித்து அவர் பேசும் போது, “ 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அம்மா என்னை தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய அழைத்தார். அப்போது நான் அம்மாவிடம், எனக்கு தமிழ் ஒழுங்காக தெரியாது. நான் எப்படி பிரச்சாரம் செய்ய முடியும் என்று கேட்டேன்.
(3 / 6)
அதற்கு அவர் சில விஷயங்களை சொல்லி, இதை மட்டும் பேசினால் போதும் என்று கூறினார். இதனையடுத்து மேக்கப் போட்டுக் கொண்டு, மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்தேன். அந்த தேர்தலில் கட்சி தோற்று விட்டது. என்னுடன் இரண்டு நடிகைகள் அப்போது வந்தார்கள். ஆனால் அவர்கள் சென்று விட்டார்கள். எனக்கு அம்மாவை மிகவும் பிடிக்கும். நான் இருந்தேன். எனக்கு அந்த தேர்தலில் ஒரு உண்மை புரிய வந்தது. அதாவது சும்மா மேக்கப் போட்டுக் கொண்டு, கையை காட்டி, ஓட்டு போடுங்கள் என்று சொன்னால், மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் யார் மக்கள் பிரச்சினைகளை பேசுகிறார்களோ, யார் உண்மைகளை உரக்கச் சொல்கிறார்களோ, அவர்களுக்கு மதிப்பளித்து, மக்கள் தங்களுடைய வாக்கை அளிப்பார்கள் என்பது புரிந்தது.
(4 / 6)
இதையடுத்து நான் அரசியலை கற்றுக்கொள்ள முயற்சிகளை எடுத்தேன். அப்படியே நான் அம்மா உடனே இருந்து கொண்டேன். 2009 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நான் பிரச்சாரம் செய்தேன். அப்போது மேக்கப் எல்லாம் போட்டுச் செல்லவில்லை; இப்போது பேசும் அளவுக்கு நான் சரளமாகவும் அப்போது தமிழ் பேசமாட்டேன். ஆனால் அந்த சமயத்தில் அதிமுக, திமுக பற்றிய சில விஷயங்களை நான் மக்களிடம் எடுத்துச் சொன்னேன்.
(5 / 6)
அந்த தேர்தலில் நாங்கள் ஒன்பது சீட்டுகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட சீட்டுகளையோ பெற்று இருந்தோம். தேர்தல் முடிவுகளை நான் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திமுக தலைவர்கள் என்னை போனில் அழைத்து, பச்சை பச்சையாக திட்டினார்கள். ஜெயித்த மிதப்பில் என்னை மிரட்டினார்கள். உன்னை கைது செய்து ஜெயிலில் அடைப்போம் என்று சாடினார்கள்.
(6 / 6)
அன்றைய தினம் என்னுடைய அம்மா பாதுகாப்பு கருதி, என்னை என்னுடைய உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். ஆனால் திமுகவிலிருந்து வந்த 10, 15 பேர் என்னுடைய வீட்டில் கல்லை எறிந்தார்கள். முறை தவறி நடந்து கொண்டார்கள் அன்றுதான் நான் ஒரு முடிவு எடுத்தேன். எனக்கு தமிழே ஒழுங்காக பேச வராது; அப்படி இருக்கும் பொழுது, நான் இவ்வளவு பேசியதே இவர்களுக்கு இவ்வளவு வலிக்கிறது என்றால், நான் நன்றாக தமிழ் பேசி, இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால், என்ன நடக்கும் என்று யோசித்தேன். அவர்கள் என்னை மிரட்டினால், நான் அதிமுகவை விட்டு சென்று விடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் அன்றுதான் நான் மிகவும் உறுதியாக ஒரு முடிவு எடுத்தேன். என்றைக்கு இருந்தாலும், எனக்கு அதிமுகதான்; அம்மாதான் என்று தொடர்ந்து நான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து, இன்று தமிழை எழுதுகிறேன் பேசுகிறேன், பிழை திருத்துகிறேன்; இந்த அளவுக்கு வந்திருக்கிறேன் என்றால், அது திமுகவினால்தான்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்