Happy Birthday Revathi : சின்ன சின்ன வண்ணக்குயிலுக்கு இன்று பிறந்தநாள்!
- பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ற உடன் நினைவுக்கு வருவது நடிகை ரேவதி. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவருக்கு இன்று பிறந்தநாள்.
- பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ற உடன் நினைவுக்கு வருவது நடிகை ரேவதி. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவருக்கு இன்று பிறந்தநாள்.
(1 / 10)
தென்னிந்கிய சினிமாவில் 1980 - 1990 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தவர் ரேவதி. இவர் நடிகையாக மட்டுமல்லாது இயக்குநராகவும் இருக்கிறார்.
(2 / 10)
இவருடைய உண்மையான பெயர் ஆஷா. இவர் கேரளாவை பூர்விமாக கொண்டவர். பின் நடிகை ரேவதி அவர்கள் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் “மண்வாசனை” என்ற திரைப் ஆண்டு மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
(3 / 10)
அதனைத் தொடர்ந்து இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
(4 / 10)
மித்ர் மை பிரெண்ட்' என்னும் படத்தை ரேவதி 2002ஆம் ஆண்டு இயக்கினார். இதில் ஷோபனா, நாசர் அப்துல்லா, ப்ரீத்தி விசா, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
(5 / 10)
இப்படத்தைத் தொடர்ந்து ரேவதி பிர் மிலேங்கே என்னும் படத்தை 2004ஆம் ஆண்டு இயக்கினார். எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி எடுக்கப்பட்ட இப்படத்தில் சல்மான் கான், ஷில்பா ஷெட்டி, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
(7 / 10)
1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் ரேவதி படங்களில் நடிக்காமல் இருந்தார்.
(8 / 10)
அதன் பின் 27 ஆண்டு காலமாக இவர்களுடைய வாழ்க்கையில் குழந்தை எதுவும் இல்லாதால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் 2002 ஆம் ஆண்டு விவாகரத்தானது.
(9 / 10)
விவாகரத்துக்கு பின் 47 வயதில் ரேவதி குழந்தையை பெற்று இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ரேவதி சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சீரியலிலும் இவர் நடித்து இருக்கிறார்.
மற்ற கேலரிக்கள்