Nalini Latest Interview: ‘14 வருஷம் அந்த மனுஷோட.. மகளிர் தினத்தன்று விவாகரத்து.. 2 பிள்ளைங்களோட நடுத்தெருவுல’ - நளினி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nalini Latest Interview: ‘14 வருஷம் அந்த மனுஷோட.. மகளிர் தினத்தன்று விவாகரத்து.. 2 பிள்ளைங்களோட நடுத்தெருவுல’ - நளினி!

Nalini Latest Interview: ‘14 வருஷம் அந்த மனுஷோட.. மகளிர் தினத்தன்று விவாகரத்து.. 2 பிள்ளைங்களோட நடுத்தெருவுல’ - நளினி!

Nov 27, 2023 04:38 PM IST Kalyani Pandiyan S
Nov 27, 2023 04:38 PM , IST

பிரபல நடிகையான நளினி, தன்னுடைய விவாகரத்து குறித்து குமுதம் யூடியூப் சேனலுக்கு பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி இது!

(1 / 6)

இது குறித்து அவர் பேசும் போது, “நிச்சயமாக நான் என்னுடைய கணவரை விட்டு பிரியும் போது, என்னால் வாழ முடியும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஏனென்றால், நான் சாவதற்கான எல்லா முடிவையும் எடுத்து விட்டேன். சாக வேண்டும் என்று நினைக்கும் பொழுதே, என்னுடைய இரண்டு குழந்தைகளையும் கையோடு அழைத்துச் சென்று விட வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன்.   அப்போதுதான் கிருஷ்ண தாசி என்ற சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. உண்மையில் எனக்கு அப்போது சின்னத்திரைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் அவர்கள் என்னை அதற்கு பழக்கினார்கள்.    

(2 / 6)

கிருஷ்ண தாசி சீரியலில் இடம் பெற்ற, மனோன்மணி கேரக்டர் தான் என்னை தைரியமாக வாழ வைத்தது. நான் பெரிய திரையை விட சின்னத்திரையை மிக மிக நேசிக்கிறேன்.  என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் ஆசை ஆசையாக சந்தோஷப்பட்டு, செய்து கொண்டது என்னுடைய கல்யாணம். நான் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும், எனக்கு எவ்வளவோ கெட்ட விஷயங்கள் நடந்தாலும், நான் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, 14 வருடங்கள் அவருடன் வாழ்ந்தேன்.   

(3 / 6)

ஆனால், என்னுடைய கணவர் விவாகரத்து கேட்டார். மகளிர் தினமன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது. அந்த தினம் வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணுக்கும் வரவே கூடாது என்று நினைத்திருந்தேன். என்ன கஷ்டமாக இருந்தாலும் ஒருவருடன் தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் நான் இருந்தேன். நான் மதுரைக் கார பெண் வேறு.   

(4 / 6)

அதனால் அந்த முடிவிலிருந்து நான் என்றுமே மாற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தேன். என்னால், இன்னொருவரோடு வாழ வேண்டும்; வாழ முடியும் என்று நான் நினைத்து பார்த்ததே கிடையாது.   

(5 / 6)

அவர் இல்லாமல் நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் நான் தற்கொலை முடிவுக்கும் வந்தேன். ஆனால் இன்று அவர் முன்னால் நான் தலை நிமிர்ந்து நடந்து கொண்டிருக்கிறேன்.” என்று பேசினார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்