தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Jyothika: ‘சூர்யாட்ட பிடிச்சதே அதுதான்; ஆணுக்கு அழகு அந்த 4 விஷயங்கள்தான் கண்ணா! - ஜோதிகா பேட்டி!

Actress Jyothika: ‘சூர்யாட்ட பிடிச்சதே அதுதான்; ஆணுக்கு அழகு அந்த 4 விஷயங்கள்தான் கண்ணா! - ஜோதிகா பேட்டி!

May 14, 2024 09:20 PM IST Kalyani Pandiyan S
May 14, 2024 09:20 PM , IST

Actress Jyothika: எங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் ஆண் (சூர்யா) தரப்பிலிருந்து அதிகமான மரியாதையும், அதிகமான பாராட்டுதலும் வருகிறது. இது உண்மையில் பெரிய விஷயம். கிட்டத்தட்ட ஒரு 80 சதவீத பெண்கள் கணவன்மார்களிடம் மிகவும் மரியாதையுடனேயே நடந்து கொள்கிறார்கள்.- ஜோதிகா பேட்டி

பிரபல நடிகையான ஜோதிகா தன்னுடைய காதலரும், கணவருமான சூர்யா தன்னை நடத்தும் விதம் குறித்து அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேசினார்.இது குறித்து அவர் பேசும் போது, “நீங்கள் தம்பதியாக இருக்கும் பட்சத்தில், ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ள வேண்டும். அதேபோல ஒருவருக்கொருவர் அவரவருக்கான ஸ்பேசை கொடுக்க வேண்டும்.   

(1 / 5)

இது மட்டுமல்லாமல், உங்களுக்கு இடையே ஒரு விதமான நட்பு இருக்க வேண்டும். இந்த 4 விஷயங்கள் உங்கள் உறவில் இருக்குமானால், இன்ன பிற விஷயங்களை இதுவே சமன்படுத்தி விடும்.எங்களுக்கு இடையேயான காதல் இந்த நான்கு விஷயங்களால்தான் நடந்தது. நானும்,சூர்யாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம். மரியாதை கொடுப்போம். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், எங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் ஆண் (சூர்யா) தரப்பிலிருந்து அதிகமான மரியாதையும், அதிகமான பாராட்டுதலும் வருகிறது. இது உண்மையில் பெரிய விஷயம். கிட்டத்தட்ட ஒரு 80 சதவீத பெண்கள் கணவன்மார்களிடம் மிகவும் மரியாதையுடனேயே நடந்து கொள்கிறார்கள்.    

(2 / 5)

ஆனால் அது ஒரு ஆண் தரப்பில் இருந்து அதிகமாக வரும் பொழுது அது பெரிய விஷயமாக இருக்கிறது. என்னுடைய திரைபயணத்தில், நான்தான் திரைப்படங்களிலிருந்து விலக வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி நடந்தேன்.  

(3 / 5)

அதன் பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்;மீண்டும் நடித்தேன். குழந்தைகளோடு மும்பைக்கு ஷிஃப்ட்டாக வேண்டும் என்று நினைத்தேன். தற்போது மாறி இருக்கிறேன்.  

(4 / 5)

என்னுடைய இந்த பயணத்தில் நான் எடுத்த முடிவுகளுக்கு சூர்யா உறுதுணையாக இருந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, ரிலேஷன்ஷிப்பில் ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய மரியாதை, பாராட்டுதல், ஸ்பேஸ் ஆகியவையே, அந்த காதலை மிகவும் நீண்ட தூரம் எடுத்துச் செல்லும்” என்று பேசினார்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்