“கணவர் இல்லன்னா யூஸ் பண்ணிக்க ட்ரை பண்றாங்க.. மறுமணம் வேணுமான்னு தோனுது? - காயத்ரிரகுராம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  “கணவர் இல்லன்னா யூஸ் பண்ணிக்க ட்ரை பண்றாங்க.. மறுமணம் வேணுமான்னு தோனுது? - காயத்ரிரகுராம்!

“கணவர் இல்லன்னா யூஸ் பண்ணிக்க ட்ரை பண்றாங்க.. மறுமணம் வேணுமான்னு தோனுது? - காயத்ரிரகுராம்!

Oct 15, 2024 09:11 PM IST Kalyani Pandiyan S
Oct 15, 2024 09:11 PM , IST

விவாகரத்து ஆன பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் பேசி இருக்கிறார்.

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரிரகுராம் விவாகரத்தான பெண்களின் நிலை குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.   

(1 / 5)

விவாகரத்து தரும் வலிகள்இது குறித்து அவர் பேசும் போது, “விவாகரத்து செய்த பெண் என்றால், சமூகத்தில் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு இருக்காது. அதுதான் உண்மை. ஒன்று, அவர்கள் அணுகுவதற்கு எளிதாக இருப்பார்கள். இன்னொன்று, அவர்களை நாம் ஈசியாக தாக்கி விடலாம் என்ற நினைப்பு ஆண்கள் மத்தியில் நிலவும்.   

(2 / 5)

இதில், அந்தப்பெண்ணின் கேரக்டர் பற்றிய அவதூறு பேச்சு உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும். அட்ஜஸ்மென்டை பொறுத்த வரை, அது சினிமாத்துறை மட்டுமல்ல. பல்வேறு துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. ஒரு பெண் விவாகரத்து செய்து விட்டு வந்து விட்டால், உடன் இருக்கும் நண்பர்களே அவளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் காப்பாற்றுவார்கள்.ஆணாகவும், பெண்ணாகவும்இன்னும் சில பெண்கள்,  தன்னுடைய கணவரை அந்த மாதிரியான பெண்களோடு பழகவிடமாட்டார்கள். எனக்கு அப்பா கூட கிடையாது. ஆகையால், என்னை நான் ஒரு பெண்ணாக இருந்தும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆணாக இருந்தும் பார்த்துக்கொள்ள வேண்டும்.உங்களது கேரக்டரை ஒருவர் அவதூறாக பேசினால் நீங்கள் வீக் ஆகி விடுவீர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அப்படி கிடையாது. நீங்கள் தைரியமாக இருக்கலாம். பார்க்கிறவர்கள் பார்வை தவறாக இருந்தால் அது அவர்களின் பிரச்சினை. அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது.   

(3 / 5)

நமக்குள்ளும் நிறைய குழப்பங்கள் வரும். ஒரு பக்கம் துணை வேண்டும் என்று தோன்றும். இன்னொரு பக்கம் துணை வேண்டுமா என்று தோன்றும். இப்போதுதான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம்.  

(4 / 5)

மீண்டும் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று நினைப்பு வரும். இதில் இரண்டாவது திருமணம் என்பது, சில பேருக்கு அமையும். சில பேருக்கு அமையாது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படிப்பட்டபெண்களை நான் செல்ஃப் கிங் என்று அழைப்பேன். நான் இனி கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன். நான் தோளில் சாய்ந்து ஆறுதல் தேடுவதற்கு கடவுள் இருக்கிறார்” என்று பேசினார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்