Actress Aishwarya: ‘லூசு மாதிரி உளறி.. அம்மாவ ரொம்ப கஷ்டப்படுத்தி..’ - ஐஸ்வர்யா ஓப்பன் டாக்!
நான் இளவயதாக இருக்கும் போது, லூசு போல ஒரு நேர்காணலில் என்னுடைய குடும்ப பிரச்சினை பற்றி பேசிவிட்டேன். அது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்து விட்டது.
(1 / 5)
தனக்கும் தன்னுடைய அம்மாவும்மான லட்சுமிக்கு இடையே நடந்த முட்டல் மோதல்களை நடிகை ஐஸ்வர்யா பெட்டர் டுடே சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.
(2 / 5)
அவர் பேசும் போது, “இதுவரை என்னுடைய அம்மா என்னை எந்த ஒரு நேர்காணலிலும் திட்டியது கிடையாது. நான் இளவயதாக இருக்கும் போது, லூசு போல ஒரு நேர்காணலில் என்னுடைய குடும்ப பிரச்சினை பற்றி பேசிவிட்டேன். அது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்து விட்டது.
(3 / 5)
காரணம் அது என்னுடைய அம்மாவின் மனதை மிகவும் புண்படுத்தி விட்டு விட்டது. அதற்காக நான் அம்மாவிடம் மிகவும் வருந்தி, மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதற்காக மஞ்சு அத்தை தொடங்கி அனைவரும் என்னை கழுவி கழுவி ஊத்தினார்கள்.
(4 / 5)
ஒரு குழந்தை தன்னுடைய பெற்றோரைப் பற்றி தவறாக பேசுவது என்பது மிக மிக மோசமான விஷயம் ஆகும். எந்த குடும்பத்தில்தான் பிரச்சினை இல்லை.நான் இளவயதில் முரண்டு பிடிப்பவளாகவே இருந்தேன். என்னுடைய வீட்டின் கருப்பு ஆடு நானாகவே இருந்தேன். நாம் ஒரு பிரபலமாக இருக்கும் பட்சத்தில், குடும்பத்தை பற்றி தவறாக பேசக்கூடாது. ஆகையால் நாம் ஒருவரை ஒருவர் பொது வெளியில் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும்.
(5 / 5)
நான் அப்போது பேஸ்புக்கில் இருந்தேன். அந்த வகையில் நான் அதில் நிறைய புகைப்படங்களை பதிவிடுவேன். ஒரு நாள் என்னுடைய கணவர் என்று பதிவிட்டு யூடியூப்பில் வீடியோ வெளியாகி இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் அம்மாவின் கணவர். குடும்பத்தோடு சென்று ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டால், அன்றைய தினம் கண்ணு பட்டு ஏதாவது நடந்து விடும். அதனால் தான் நான் சோசியல் மீடியாவில் என்னுடைய குடும்பம் சம்பந்தமான புகைப்படங்களை பதிவிடுவது இல்லை” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்