குண்டூசி விழுந்தா கூட சத்தம்.. மணியின் மாஸ்டர் மூளை.. அவர் செட் எப்படி இருக்கும் தெரியுமா? - ஸ்ரீகாந்த்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குண்டூசி விழுந்தா கூட சத்தம்.. மணியின் மாஸ்டர் மூளை.. அவர் செட் எப்படி இருக்கும் தெரியுமா? - ஸ்ரீகாந்த்!

குண்டூசி விழுந்தா கூட சத்தம்.. மணியின் மாஸ்டர் மூளை.. அவர் செட் எப்படி இருக்கும் தெரியுமா? - ஸ்ரீகாந்த்!

Nov 11, 2024 11:48 PM IST Kalyani Pandiyan S
Nov 11, 2024 11:48 PM , IST

அப்போதுதான் மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அங்குதான் நான் மணிரத்தினத்தை முதன் முறையாக சந்தித்தேன். என்னை அவர் டெஸ்ட் ஷூட் செய்தார். முதலில் சூர்யா சாரின் ரோலுக்காக டெஸ்ட் செய்தார்கள். - ஸ்ரீகாந்த்!

நடிகர் ஸ்ரீகாந்த், மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படம் எப்படி மிஸ் ஆனது என்பது குறித்து, அண்மையில் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “மனசெல்லாம் திரைப்படத்தில் நானும், த்ரிஷாவும் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அங்குதான் நான் மணிரத்தினத்தை முதன் முறையாக சந்தித்தேன். என்னை அவர் டெஸ்ட் ஷூட் செய்தார். முதலில் சூர்யா சாரின் ரோலுக்காக டெஸ்ட் செய்தார்கள். ஒரு புல்லட்டை நான் ஓட்டுவது போலவும், பின்னால் ஹீரோயின் உட்கார்ந்திருப்பது போலவும் அந்த காட்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

(1 / 6)

அதன் பின்னர் சித்தார்த் ரோலுக்காக அப்போது அவரிடம் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கராவிடம் நான் டயலாக் சொல்லிக் கொண்டிருந்தேன். எங்கள் யாருக்கும் கதை தெரியாது. ஒப்பந்தம் போடும்போதுதான் அங்கு கதை சொல்லப்படும். எனக்கு நீண்ட நாட்களாக, ஒரு சிட்டி பாய் ரோலை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. அதைத்தான் அங்கு சித்தார்த் ரோலில் வடிவமைத்திருந்தார்கள். இதையடுத்துதான் நான் அதில் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருந்தேன்.  

(2 / 6)

மணி சார் அப்படி இருப்பார்படப்பிடிப்பில் மணி சாரை பார்ப்பதற்கு அப்படி இருக்கும். அவரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும். எல்லோரும் அவ்வளவு கவனமாக வேலை செய்வார்கள். அப்போதுதான் பெரிய டைரக்டர் என்றால், இப்படித்தான் இருப்பார்களோ என்று நான் தெரிந்து கொண்டேன். மணிரத்னம் பேசும்போது கூட, மிகவும் லோ வாய்ஸில் தான் பேசுவார். நான் அதை மிகவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த மேக்கப் மேன் பாலச்சந்தரிடம் இருந்தவர். அவர் எல்லாவற்றையும் கவனமாக கேள். அதையெல்லாம் மணிசார் மிக உன்னிப்பாக கவனிப்பார் என்று கூறினார்.   

(3 / 6)

இதற்கிடையேதான் எனக்கு அடிபட்டு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டேன். இதற்கிடையில், என்னைக்கேட்காமல் அப்போது மேனஜராக இருந்த என்னுடைய சித்தப்பா, என்னை கேட்காமல் மணி சாரின் படத்திற்கு நான் வாங்கிய அட்வான்ஸ்யை திருப்பிக் கொடுத்து விட்டார். நான் உடல் நலம் சரியில்லாமல் இருந்து போது மணி சாரிடம் இருந்து எனக்கு தினமும் ஒரு பூங்கொத்து வரும். 

(4 / 6)

ஆஸ்கார் ரவிச்சந்திரன்அவர் எனக்காக காத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அது வருவது நின்று விட்டது. அது குறித்து நான் கேட்ட போது படம் கையை விட்டு சென்று விட்டதாக அப்பா கூறினார். ஏன் என்று கேட்ட போது, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தன்னுடைய படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான் மணிரத்னம் படத்திற்கு ஸ்ரீகாந்த் செல்ல வேண்டும் என்று கறாராக சொல்லியதும், 

(5 / 6)

அதன் காரணமாக சித்தப்பா அட்வான்ஸை திருப்பிக்கொடுத்ததும் தெரியவந்தது. அதற்காக நான் மேனஜரை குறை சொல்லவில்லை. காரணம், அவருக்கு நான் அந்த அளவு சுதந்திரம் கொடுத்து இருக்கக்கூடாது. அதை நான் அந்த படத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்