Youtubers vs Sarath kumar: பத்திரிகையாளர் போர்வையில் Youtube-இல் அவதூறு! ஆப்பு வைக்க ரெடியாகும் சரத் குமார்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Youtubers Vs Sarath Kumar: பத்திரிகையாளர் போர்வையில் Youtube-இல் அவதூறு! ஆப்பு வைக்க ரெடியாகும் சரத் குமார்!

Youtubers vs Sarath kumar: பத்திரிகையாளர் போர்வையில் Youtube-இல் அவதூறு! ஆப்பு வைக்க ரெடியாகும் சரத் குமார்!

Jul 29, 2024 08:28 PM IST Kathiravan V
Jul 29, 2024 08:28 PM , IST

  • பிரபலங்களை தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத் தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

சமூக ஊடகங்கள் மூலம் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறி உள்ளார். 

(1 / 7)

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சமூக ஊடகங்கள் என்பவை சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். பல முக்கியத் தகவல்களை பகிர்வதாகவோ அல்லது மக்களை மகிழ்விக்கும் விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயார் செய்வதாகவோ அவர்களது பணி அமையலாம். ஆனால் தற்போது பலவகையிலும் சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது.

(2 / 7)

பிரபலங்களின் கருத்துக்களை விமர்சிப்பதற்குப் பதிலாக அவர்களைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத் தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

(3 / 7)

பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை என்பதோடு, யாரது தனிப்பட்ட வாழ்விலும் தலையிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை என்பதே அடிப்படை சமூக நீதி.

(4 / 7)

அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.

(5 / 7)

அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.(pixel)

இனிமேலும் பொய்களைக் கூறி,கீழ்தரமாக விமர்சித்து தங்கள் எல்லையைக் கடக்கும் நபர்கள் சுய பரிசோதனைசெய்து தங்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் சட்டப் படியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

(6 / 7)

கடிதத்தின் நகலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், திருஅஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் அனுப்பி வைக்க இருக்கிறேன். அனாவசியமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்து உள்ளார். 

(7 / 7)

கடிதத்தின் நகலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், திருஅஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் அனுப்பி வைக்க இருக்கிறேன். அனாவசியமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்து உள்ளார். (ANI)

மற்ற கேலரிக்கள்