Accidents in Astrology: 'மேஷம் முதல் மீனம் வரை!’ விபத்து, கண்டம் போன்ற உயிர் பயத்தை தரும் கிரக சேர்க்கைகள்! உஷார்!-accidents and life changes caused by planetary conjunctions sani chevvai budhan and more - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Accidents In Astrology: 'மேஷம் முதல் மீனம் வரை!’ விபத்து, கண்டம் போன்ற உயிர் பயத்தை தரும் கிரக சேர்க்கைகள்! உஷார்!

Accidents in Astrology: 'மேஷம் முதல் மீனம் வரை!’ விபத்து, கண்டம் போன்ற உயிர் பயத்தை தரும் கிரக சேர்க்கைகள்! உஷார்!

Sep 24, 2024 08:21 PM IST Kathiravan V
Sep 24, 2024 08:21 PM , IST

  • Accidents in Astrology: ஜாதகத்தில் மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ஆறு வீடுகளும் பாவி கிரகங்களின் வீடுகள் ஆகும். இதில் சிம்மம் வீடு என்பது பாதி அளவே பாவியின் வீடு ஆகும். ஆனால் மீதம் உள்ள மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய வீடுகள் கட்டாயம் பாவிகளின் வீடுகள் ஆகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் சடுதியில் ஏற்படும் சில நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை மொத்தமாக திருப்பி போட்டுவிடும் தன்மை கொண்டவையாக இருக்கும். அந்த மாதிரியான நிகழ்வுகளை தரக்கூடியது சில வகை கிரகங்களுடைய இணைவுகள் உள்ளன. 

(1 / 8)

 உங்களுடைய ஜாதகத்தில் இது போன்ற கிரக இணைவுகள் இருந்தால் மிகுந்த கவனம் உடன் இருக்க வேண்டும்.  ஒருவரது ஜாதகத்தில் பாவ வீடுகளில் செவ்வாய் மற்றும் சனி பகவானின் இணைவு இருந்தால் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இந்த அமைப்பு பெற்றவர்கள் எப்போதும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வோடு இருப்பது முக்கியம். ஜாதகத்தில் மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ஆறு வீடுகளும் பாவி கிரகங்களின் வீடுகள் ஆகும்.  இதில் சிம்மம் வீடு என்பது பாதி அளவே பாவியின் வீடு ஆகும். ஆனால் மீதம் உள்ள மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய வீடுகள் கட்டாயம் பாவிகளின் வீடுகள் ஆகும். 

(2 / 8)

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானின் மூன்றாவது பார்வை செவ்வாய் பகவானின் மீது விழுகின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை வாரி குவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 8)

இதே போல் சனி, சந்திரன் சேர்க்கையும் பிரச்னைகளை கொண்டு வரும் அமைப்பு உடையது. இந்த சேர்க்கையான இயற்கை சுப கிரகங்களின் வீடுகளில் இருந்தால் புணர்பு தோஷம் ஏற்பட்டு மன உளைச்சல், சிக்கல்கள், உடல்நலிவு உள்ளிட்ட பிரச்னைகளை தரும். ஆனால் இந்த இணைவு ஆனது பாவிகளுடைய வீடுகளில் இருந்தால் மிக மோசமான பாதிப்பு, சிக்கல்கள், விபத்து, கண்டங்களை ஏற்படுத்தும். இது போன்ற கிரக அமைப்புகளை பெற்றவர்கள் மிகுந்த விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் ஆகும். 

(4 / 8)

சந்திரன்-செவ்வாய் இணைவும் சிக்கல்களை தரக்கூடிய அமைப்பாக உள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்றாலும் சிக்கல்கள் உண்டாகும். சந்திரன் - செவ்வாய் கிரக இணைவு, சமசப்தம பார்வை ஆனது கண்டங்களை தரும். இது ஜாதகருக்கு தலையில் காயம் ஏற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த அமைப்பு பாவி கிரக வீட்டில் இருந்தால் பாதிப்புகள் மிக அதிகம் ஆனதாக இருக்கும். 

(5 / 8)

புதனும் சந்திரன் இணைவு ஆனது மனநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும்.  மனதிற்குள் தேவையற்ற கற்பனைகள் குழப்பங்கள் தோன்றுவது, விபத்தில் தன்னிலை மறப்பது உள்ளிட்ட பிரச்னைகளை உண்டாக்கும்.  

(6 / 8)

இது மட்டும் இன்றி 6 மற்றும் 8ஆம் அதிபதிகள் ஒரு ஜாதகத்தில் இணைந்தோ அல்லது தொடர்பை பெற்ற நிலையில் இருந்தால் இயற்கை பாவிகளின் வீடுகளிலோ அல்லது பார்வையோ பெற்று இருந்தாலோ விபத்து மற்றும் கண்டங்களில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம். செவ்வாய்-சனி சேர்க்கை, சந்திரன்-சனி சேர்க்கை, சந்திரன்-புதன் சேர்க்கைகள் பாதிப்புகளை தரக்கூடியது 

(7 / 8)

சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து இருப்பது தண்ணீர் சார்ந்த கண்டங்களை ஏற்படுத்த கூடியது. இவர்களின் இணைவு பாவ கிரக வீடுகளில் இருந்தால் ஜாதகர் மிக கவனம் ஆக இருக்க வேண்டும். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்