75th independence day: தேசிய கொடியுடன் சினிமா பிரபலங்கள் சுதந்திர தின வாழ்த்து!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  75th Independence Day: தேசிய கொடியுடன் சினிமா பிரபலங்கள் சுதந்திர தின வாழ்த்து!

75th independence day: தேசிய கொடியுடன் சினிமா பிரபலங்கள் சுதந்திர தின வாழ்த்து!

Jan 08, 2024 05:24 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2024 05:24 PM , IST

  • திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் 75வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

நாட்டின் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சுதந்திர தின கொண்டாட்டத்தின் புகைப்படங்களை, சுதந்திர தின செய்தியுடன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்

(1 / 13)

விடுமுறையை கொண்டாட பார்சிலோனா சென்றுள்ள நயன்தாரா, அங்கு கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தேசிய கொடியுடன் சுதந்திரதினத்தை கொண்டாடியுள்ளார்

(2 / 13)

வெள்ளை நிற உடை அணிந்து கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு புன்னகையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், புகழ்பெற்ற நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. #harghartiranga என்ற ஹேஷ்டாக்குடன் அனைவருக்கும் சுதந்திர தின நாள் வாழ்த்துகள். ஜெயஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்

(3 / 13)

தனது சினிமாக்களில் மூலம் தேசப்பற்றை ஏற்படுத்திய அர்ஜூன் தேசிய கொடி ஏற்றி அதற்கு சல்யூட் அடிக்கும் விதமாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

(4 / 13)

தேசிய கொடியை தனது வீட்டில் வைத்துள்ள நடிகை த்ரிஷா, கொடி காற்றில் பறக்கும் விடியோவை பகிர்ந்துள்ளார்

(5 / 13)

தனது வீட்டின் மொட்டை மாடியில் கொடிக்கம்பம் ஊன்றி அதில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ்

(6 / 13)

காதலர் தினம் படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை சோனாலி பந்த்ரே அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அங்கு இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற, அங்கு கையில் இந்திய தேசிய கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அட்லாண்டாவில் தற்போது வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்

(7 / 13)

பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் தேசிய கொடியை பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து," எங்களது தேசிய கொடி எப்போதும் உயர பறக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்

(8 / 13)

பாலிவுட் நடிகர் குணல் கீம்மு மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சோகா அலிகான் ஆகியோர் தங்களது குழந்தையுடன் தேசிய கொடியை ஏந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மனதில் அச்சம் ஏதும் இல்லாமல் தலை நிமிர்ந்து நிற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்

(9 / 13)

பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது கைகளில் தேசிய கொடியை ஏந்தி, நாம் எங்கே வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. நமது தேசிய கொடி மேலே பறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

(10 / 13)

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்ட தேசிய கொடி அருகே இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும், அன்புடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும். சுதந்திர தின வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்

(11 / 13)

நடிகர் விவேக் மறைந்துவிட்டாலும், அவர் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விடியோ க்ளிப்பை பகிர்ந்துள்ளார் நடிகரும் விவேக்கின் நெருங்கிய நண்பருமான செல்முருகன்

(12 / 13)

கவிப்பேரரசு வைரமுத்து ரோஜா படத்தில் இடம்பெறும் தமிழா தமிழா பாடல் பின்னணியில் ஒலிக்க, தேசிய கொடியை தனது வீட்டில் வைத்து அதை விடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் கேப்ஷனாக தாயின் மணிக்கொடிக்குத் தலைநிமிர்ந்த வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்

(13 / 13)

மற்ற கேலரிக்கள்