நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - நன்றியை கூற இத்தனை வழிகளா?
உங்கள் வாழ்வில் உடன் வருபவர்களின் உறவை மேலும் வலுப்படுத்த நன்றி என்ற ஒற்றை சொல் உதவும். மற்றவர்கள் உங்களுக்கு செய்யும் உதவிக்கு மறக்காமல் நன்றி கூறுங்கள். நன்றி கூறும் வழிகள்…
(1 / 8)
உங்களின் நன்றியை காட்டுவதற்கு, ஒருவர் செய்த விஷயத்தை பாராட்டி, அவருக்கு நன்றி கூறுவதுதான். ஒரு சிறிய நன்றி உங்கள் உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா? நன்றி சொல்லிப்பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு நன்றியின் அருமை புரியும். நன்றி சொல்வதற்கு இதோ சில வழிகள். (Photo by wewe yang on Pexels)
(2 / 8)
நன்றி என பளிச்சென்று ஒரு வார்த்தையில் கூறி நீங்கள் ஏன் நன்றி சொல்கிறீர்கள் என்று தெரிவியுங்கள். (File Photo)
(3 / 8)
நன்றி என்று ஒரு அட்டையில் எழுதி அதை அவர்களுக்கு பரிசாக்குங்கள். அது இன்னும் நினைவில் நிலைத்திருக்கும்.(Pixabay)
(4 / 8)
இப்படி நன்றி கூறுவது அனைவருக்கும் பிடிக்கும். ஆமா கிப்ட் யாருக்குத்தான் பிடிக்காது? சிறிய பரிசுப்பொருளாக அது இருக்கலாம். ஒரு பூ அல்லது காபி அல்லது சாக்லேட் என எதுவாக இருந்தாலும், அது அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக்கொடுக்கும் என்று கொடுத்துத்தான் பாருங்களேன் புரியும்.(Photo by Towfiqu barbhuiya on Unsplash)
(5 / 8)
நன்றியை வார்த்தைகளால் அல்லாமல் உதவியால் கூட செய்யலாம். அதுவும் அவர்களின் கடினமான நேரங்களில் அவர்களின் கூட இருப்பது, அவர்களுக்கு சிறுசிறு உதவிகள் செய்வது எவ்வளவு ஆறுதலாக இருக்கும். (Shutterstock)
(6 / 8)
பொது இடத்தில் அவர்களை பாராட்டுங்கள். அவர்களின் சாதனைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள். அலுவலக கூட்டத்தில் அனைவர் முன்னும் பாராட்டுங்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்வார்கள். (Unsplash)
(7 / 8)
அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்காக நீங்கள் உங்களின் நேரத்தை செலவழிக்கிறுறீர்கள் என்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். (Pexels)
மற்ற கேலரிக்கள்