WhatsApp tips: ஸ்டோரேஜ் கட்டுப்படுத்த எளிய டிப்ஸ்! வாட்ஸ்அப்பின் இந்த அம்சங்கள் பற்றி தெரியுமா?
WhatsApp tips: மெசேஜிங் செயலியாக இருந்து வரும் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்களும், அம்சங்களும் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன. அதில் இருக்கும் சில முக்கிய அம்சங்களும் அதன் பயன்பாட்டையும் பார்க்கலாம்
(1 / 5)
Disappearing Messages: இந்த அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்துக்கு பின் தானாகவே டெலிட் ஆகிவிடும் விதமாக செய்துகொள்ளலாம். இதன் மூலம் தனியுரிமையானது பாதுகாக்ப்படுவதோடு போன் ஸ்டோரேஜ் தேவையில்லாத மெசேஜ்களால் நிரம்பிவிடாது. பயனாளர்கள் 24 மணி நேரம், 7 நாள்கள், 90 நாள்கள் வரை தனிப்பட்ட அல்லது குரூப்களுக்கு அனுப்பும் மெசேஜ் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளலாம்(Pixabay)
(2 / 5)
Audio and Video Calls: வாட்ஸ் மூலம் ஆடியோ மற்றும் விடியோ கால்களை மேற்கொள்ளலாம். தனிப்பட்ட நபருக்கு அல்லது குரூப் கால்கள் மேற்கொள்ளலாம். ஒரே சமயத்தில் 32 பேருக்கு கால்களை மேற்கொள்ளலாம். அதேபோல் ஆடியோவில் இருந்து விடியோவுக்கும், விடியோவில் இருந்து ஆடியோவுக்கு எளிதாக ஸ்விட்ச் செய்து கொள்ளலாம்(unsplash)
(3 / 5)
Chat Wallpaper: உங்கள் வாட்ஸ் அப் சாட்டின் லுக்கை மேம்படுத்தும் விதமாக வால்பேப்பர்களை மாற்றியமைத்து கொள்ளலாம். வாட்ஸ்அப் டெம்ப்ளேட் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் மூலம் இதை தேர்வு செய்து கொள்ளலாம். அனைத்து சாட்களுக்கும் வால்பேப்பர் தேவைப்படாவிட்டால், விரும்பிய சாட்களுக்கு மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம்(unsplash)
(4 / 5)
Privacy Settings: விருப்பத்துக்கு தகுந்தவாறு தனியுரிமை செட்டிங்ஸை மாற்றி அமைத்து கொள்ளலாம். ஆன்லைன் ஸ்டேட்டஸ், புரொஃபல் தகவல் தெரிவது, ரீட் செய்த தகவல், குரூப் அழைப்பு போன்றவற்றை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். செட்டிங்ஸ் மெனு சென்று வேண்டியதை தேர்வு செய்து கொள்ளலாம்(unsplash)
மற்ற கேலரிக்கள்