Bone Health: இந்த சிம்பிள் பயிற்சி போதும்! உங்கள் எலும்புகளை வலிமையாக வைத்து கொள்ளலாம்-5 effective exercises to boost bone health - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bone Health: இந்த சிம்பிள் பயிற்சி போதும்! உங்கள் எலும்புகளை வலிமையாக வைத்து கொள்ளலாம்

Bone Health: இந்த சிம்பிள் பயிற்சி போதும்! உங்கள் எலும்புகளை வலிமையாக வைத்து கொள்ளலாம்

Jan 12, 2024 08:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 12, 2024 08:30 PM , IST

தொடர்ச்சியாக தவறாமல் உடல் பயிற்சி செய்வோரின் எலும்புகள் வலிமையையும், சமநிலையும் மேன்மையடையும். இதனால் எலும்பு முறிவு பாதிப்பின் ஆபத்தும் தடுக்கப்படுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பேனி காக்க உதவும் மிகவும் எளிமையான உடற்பயிற்சிகளை பார்க்கலாம்

எலும்புகள் ஆரோக்கியத்தை பேனி காப்பதில் கால்சியம் நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக கால்சியம் நிறைந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டால் போதுமானது கிடையாது. உடல் செயல்பாட்டையும் வெளிப்படுத்தினால் மட்டுமே எலும்புகளின் வளர்ச்சியானது நிலையாக இருக்கும்

(1 / 7)

எலும்புகள் ஆரோக்கியத்தை பேனி காப்பதில் கால்சியம் நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக கால்சியம் நிறைந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டால் போதுமானது கிடையாது. உடல் செயல்பாட்டையும் வெளிப்படுத்தினால் மட்டுமே எலும்புகளின் வளர்ச்சியானது நிலையாக இருக்கும்

எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எந்த சிரமமும் இல்லாமல் சிம்பிளான உடற்பயிற்சியை  தவறாமல் மேற்கொள்ள வேண்டும். உடல் செயல்பாட்டை வெளிப்படுத்தினாலே எலும்புகளை வலுப்படுத்தி அதை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்

(2 / 7)

எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எந்த சிரமமும் இல்லாமல் சிம்பிளான உடற்பயிற்சியை  தவறாமல் மேற்கொள்ள வேண்டும். உடல் செயல்பாட்டை வெளிப்படுத்தினாலே எலும்புகளை வலுப்படுத்தி அதை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்(Pexels)

நடைபயிற்சி: பயனுள்ள எடை தாங்கும் பயிற்சியாக நடைபயிற்சி. இது எலும்புகளை வலுப்படுத்தவும், அதன் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. காலை, மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

(3 / 7)

நடைபயிற்சி: பயனுள்ள எடை தாங்கும் பயிற்சியாக நடைபயிற்சி. இது எலும்புகளை வலுப்படுத்தவும், அதன் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. காலை, மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்(Freepik)

டான்ஸ் ஆடுதல்: இதை செய்ய சிலர் அசெளகரியமாக உணர்ந்தாலும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு டான்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. மனஅழுத்தத்தை குறைத்து, எடையை குறைக்கவும் செய்கிறது. டான்ஸ் அசைவுகளை வெளிப்படுத்துவதன் மூலம் எடை தாங்கும் பலன்களை பெறலாம்

(4 / 7)

டான்ஸ் ஆடுதல்: இதை செய்ய சிலர் அசெளகரியமாக உணர்ந்தாலும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு டான்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. மனஅழுத்தத்தை குறைத்து, எடையை குறைக்கவும் செய்கிறது. டான்ஸ் அசைவுகளை வெளிப்படுத்துவதன் மூலம் எடை தாங்கும் பலன்களை பெறலாம்

படிக்கட்டுகளில் ஏறுதல்: உங்கள் எலும்புகளை வலுப்படுத்த லிஃப்ட் உபயோகிப்பதை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்த தொடங்குங்கள். படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் உடலின் கீழ் பகுதியில் வலிமையை பெறலாம்

(5 / 7)

படிக்கட்டுகளில் ஏறுதல்: உங்கள் எலும்புகளை வலுப்படுத்த லிஃப்ட் உபயோகிப்பதை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்த தொடங்குங்கள். படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் உடலின் கீழ் பகுதியில் வலிமையை பெறலாம்(Freepik)

எதிர்ப்புப் பயிற்சி: கையில் ரெசிஸ்டென்ஸ் பேண்ட் அணிவது, கால்களில் அழுத்தங்களை செய்வது, ஸ்குவாட் பயிற்சி  தசைகளை வலிமை பெற செய்வதுடன், எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கிறது

(6 / 7)

எதிர்ப்புப் பயிற்சி: கையில் ரெசிஸ்டென்ஸ் பேண்ட் அணிவது, கால்களில் அழுத்தங்களை செய்வது, ஸ்குவாட் பயிற்சி  தசைகளை வலிமை பெற செய்வதுடன், எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கிறது(Freepik)

யோகா: சூர்ய நமஸ்காரம், போர்வீரன் போஸ் போன்ற யோகா போஸ் செய்வதன் மூலம் உடலின் சமநிலை, நெகிழ்வுத்தன்மை மற்றும் தசை வலிமையை மேம்படுத்துகிறது

(7 / 7)

யோகா: சூர்ய நமஸ்காரம், போர்வீரன் போஸ் போன்ற யோகா போஸ் செய்வதன் மூலம் உடலின் சமநிலை, நெகிழ்வுத்தன்மை மற்றும் தசை வலிமையை மேம்படுத்துகிறது(Freepik)

மற்ற கேலரிக்கள்