kodeeswara Yogam: சனி கொடுத்தால் எவர் தடுப்பார்! 2025 சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!-2025 sani peyarchi palangal kodeeswara yogam for rishabam mithunam kadagam viruchigam rasis - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kodeeswara Yogam: சனி கொடுத்தால் எவர் தடுப்பார்! 2025 சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

kodeeswara Yogam: சனி கொடுத்தால் எவர் தடுப்பார்! 2025 சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

Sep 22, 2024 08:55 PM IST Kathiravan V
Sep 22, 2024 08:55 PM , IST

  • Sani Peyarchi Palangal 2025: சனி பகவான் ஆனவர் அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

(1 / 6)

இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஏழரை சனி பாதிப்புகள் முழுமையாக நிறைவடைகின்றது. கும்பம் ராசிக்கு பாத சனியும், மீனம் ராசிக்கு ஜென்மசனியும், மேஷம் ராசிக்கு விரைய சனியும் தொடங்க உள்ளது.

(2 / 6)

ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னக்காரங்களுக்கு சனி பகவான் முதன்மையான பலன்களை கொடுப்பார். ரிஷபத்துக்கு லாபஸ்தானத்திற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் லாபத்திற்கு எந்த குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக வராத கடன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சி உண்டாகும். தொழிலில் லாபம் இரட்டிப்பு ஏற்படும்.

(3 / 6)

மிதுனம் ராசி மற்றும் மிதுன லக்னக்காரங்களுக்கு கர்ம ஸ்தானம் எனப்படும் தொழில் ஸ்தானம் தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வருகிறார். 10ஆம் இடத்தில் ஒரு பாவி ஆவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதியாக உள்ளது. இதனால் தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். சனி கிரகம் ஆனது உழைப்பாளி கிரகம் ஆகும். எனவே மிதுனம் ராசிக்காரர்கள் தொடர் உழைப்பில் கவனமாக இருப்பார்கள். கடின உழைப்புக்கு ஏற்ற வகையில் அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். பலருக்கு எடுக்கும் முயற்சிகள் மூலம் கோடீஸ்வர யோகம் உண்டாகும், 

(4 / 6)

கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி காலத்தில் கோடீஸ்வர யோகம் அதிகம் உண்டு. பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் வருகிறார். பாக்கிய ஸ்தானம் என்பது நம் முன் ஜென்ம நற்பலன் மற்றும் தீய பலன்கள் அடிப்படையில் சனி பகவான் நன்மைகளை தருவார். ஒன்பதாம் வீட்டுக்கு சனி பகவான் வருவதால் முன் ஜென்மத்தில் நீங்கள் செய்த நல்ல வினைகளுக்கு உண்டான எல்லாவிதமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். அடிக்கப்படியான நன்மைகள் உண்டாகும். மிகப்பெரிய உச்சத்தை அடைவீர்கள். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். இரட்டிப்பு லாபம் ஏற்படும். உங்கள் நேர்மையான செயல்பாடுகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.

(5 / 6)

விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரும் சனி பெயர்ச்சியில் கோடீஸ்வர யோகம் உண்டு. சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் வீட்டில் இடம்பெயர்கிறார். இந்த பிறவியில செய்யக்கூடிய நல்ல வினைகளுக்கு உண்டான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். விருச்சிகம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி முடிகின்றது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக சந்தித்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கியவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். வெளிநாடுகள் செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாப மேன்மை ஏற்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பாத்யம் மூலம் செல்வ செழிப்பு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்பதால் கோடீஸ்வர யோகம் நிச்சயம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்