#10yearsofAttakathi: காதல் தோல்வியை கொண்டாடிய பா.ரஞ்சித்தின் அட்டகத்தி
- காதலை கொண்டாடிய தமிழ் படங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் காதல் தோல்வியை ஒரு கொண்டாட்டமாக காட்டி படமாக இயக்குநர் பா. ரஞ்சித்தின் அட்டகத்தி அமைந்திருந்தது.
- காதலை கொண்டாடிய தமிழ் படங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் காதல் தோல்வியை ஒரு கொண்டாட்டமாக காட்டி படமாக இயக்குநர் பா. ரஞ்சித்தின் அட்டகத்தி அமைந்திருந்தது.
(1 / 6)
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்த காதல் தோல்வியின் மூலம் அட்டகத்தியாக நின்ற தருணத்தை கண்முன்னே பிரதிபலிக்கும் விதமாக இந்தப் படம் அமைந்திருந்தது
(2 / 6)
இளைஞர்களின் காதலை வைத்து பல்வேறு படங்கள் வந்திருந்தாலும் அதில் நகைச்சுவையுடன் கூடிய எதார்த்த வாழ்க்கையை கலந்த படமாக இருக்கும் அட்டகத்தி மூலம்தான் தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய பா. ரஞ்சித் தற்போது டாப் இயக்குநர் பட்டியலில் உள்ளார்.
(3 / 6)
முற்றிலும் புதுமுகங்களோடு உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் முதல் டீஸர் வரை அனைத்து கவனம் பெற்றதோடு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின
(4 / 6)
வெறும் கல்லூரி காலத்து காதல், ஒன் சைடு லவ் என்றில்லாமல் நடுதர இளைஞர்களின் வாழ்க்கையை கண்முன்னே அப்படியே அட்டகத்தி படத்தில் நிறுத்தியிருப்பார்
(5 / 6)
சென்னை புறநகர் பகுதியில் வாழும் ஒரு நடுத்தர குடும்ப இளைஞரின் கல்லூரி வாழ்க்கையை நகைச்சுவை, எதார்த்தம், பேண்டஸி என அனைத்து கலத்தும் அட்டகத்தி படத்தில் கொடுத்திருப்பார் இயக்குநர் பா. ரஞ்சித்
மற்ற கேலரிக்கள்