தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  World Turtle Day 2024: ஆமை, கடலாமைகள் என்ன வித்தியாசம்? உலக கடலாமைகள் தினம் இன்று! அதிக கடலாமைகள் இருக்கும் இடங்கள்

World Turtle Day 2024: ஆமை, கடலாமைகள் என்ன வித்தியாசம்? உலக கடலாமைகள் தினம் இன்று! அதிக கடலாமைகள் இருக்கும் இடங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 23, 2024 06:00 AM IST

World Turtle Day 2024: பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும் ஆமைகள், கடலாமைகள் என்ன வித்தியாசம். உலக கடலாமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், அதன் வரலாறு முதல் முக்கியத்துவம் வரை உலக கடலாமைகள் தினம் பற்றிய பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்

ஆமை, கடலாமைகள் என்ன வித்தியாசம்? உலக கடலாமைகள் தினம் இன்று, இந்தியாவில் அதிக கடலாமைகள் இருக்கும் இடங்கள்
ஆமை, கடலாமைகள் என்ன வித்தியாசம்? உலக கடலாமைகள் தினம் இன்று, இந்தியாவில் அதிக கடலாமைகள் இருக்கும் இடங்கள் (File Photo)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆமை, கடலாமை ஆகிய இரண்டும் சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. கடலாமைகளின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்விடம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை நன்கு புரிந்துகொண்டு அவற்றின் நல்வாழ்வுக்கு பங்களிக்கவும் மக்களை வலியுறுத்தும் விதமாக உலக கடலாமைகள் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் உலக கடலாமைகள் தினம் மே23ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க நாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்

கடலாமைகள் தினம் வரலாறு

அமெரிக்க ஆமை மீட்பு என்கிற அமைப்பு ஆமைகள் மற்றும் கடலாமைகள் நல்வாழ்வு, மீட்புக்கு உதவும் அமைப்பாக இருந்து வருகிறது. முதலில் ஆமை மற்றும் கடலாமை ஆகிய இரண்டு உயிரினங்களுக்கிடையேயான வேறுபாடுகளை கற்றுக்கொள்வது அவற்றை நன்கு புரிந்துகொள்வதற்கான முதல் படியாக இருந்து வருகிறது.

கடந்த 2000ஆவது ஆண்டில் அமெரிக்க ஆமை மீட்பு அமைப்பால் ஆமைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக ஒன்றிணைய மக்களை வலியுறுத்தும் ஒரு வழியாக இந்த நாள் தொடங்கப்பட்டது.

கடலாமைகள் தினம் முக்கியத்துவம்

ஆமைகள் நிலத்தில் வாழும் உயிரினமாகும். கடலாமைகள் தண்ணீர் வாழ்கின்றன. ஆமைகள் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழும். கடலாமைகள் 40 ஆண்டுகள் வரை இருக்கும். இதுபோல் பல்வறு அடிப்படை வேறுபாடுகள் இவ்விரு உயிரினங்களுக்கும் இருந்தபோதிலும், சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை வகிக்கின்றன. கடலாமைகள் கரையில் கரை ஒதுங்கும் இறந்த மீன்களை உண்கின்றன. ஆமைகள் மற்ற உயிரினங்கள் வசிக்கும் குழிகளைத் தோண்டி அதில் இறையை தேடுகின்றன.

கடலாமை தினம் கொண்டாட்டம்

இந்த நாளை கொண்டாடுவதற்கான சிறந்த வழியாக ஒரு ஆமை அல்லது கடலாமையை தத்தெடுத்து, அவற்றின் நல்வாழ்வுக்கு நாம் பங்களிப்பதை உறுதி செய்வதாகும். அதே போல் ஆமை பாதுகாப்பு மையங்களுக்கும் நன்கொடை அளிக்கலாம்.

ஆமை மீட்பு மையங்களில் தன்னார்வத் தொண்டு செய்வது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்க மக்களை வலியுறுத்தவும் உதவலாம்.

இந்தியாவில் அதிக கடலாமைகள் இருக்கும் இடங்கள்
இந்தியாவில் அதிக கடலாமைகள் இருக்கும் இடங்கள்

இந்தியாவில் கடலாமைகள் அதிகம் இருக்கும் கடற்கரைகள்

ஒடிசா மாநிலத்தில் இருக்கும் காகிர்மாதா கடற்கரையில் அமைந்திருக்கும் காகிர்மாதா கடல் சரணாலயம். இது ஒடிசாவில் இருக்கும் ஒரே கடல் சரணாலயம் ஆகும். இது பிடர்கனிகா வனவிலங்கு சரணாலயத்தில் அமைந்துள்ளது மற்றும் ஆலிவ் ரிட்லி என்ற வகை கடலாமைகளுக்கான உலகின் மிகப்பெரிய கூடு கட்டும் தளமாக உள்ளது. இந்த அற்புதமான உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக இந்த சரணாலயம் நிறுவப்பட்டது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை மக்களால் கூடுகள் நிறுவும் பணிகளை பார்க்கலாம்

மகராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்திருக்கும் வேலாஸ் கடற்கரை. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்ச கடற்கரை, ஆலிவ் ரிட்லி கடலாமைகளின் முக்கிய கூடு கட்டும் இடமாகும்.

கடல் ஆமைகள் முட்டையிட வரும் மேற்கு கடற்கரையில் இது ஒரு தனித்துவமான இடம். வேலாஸ் கடலாமை திருவிழா கடல் ஆமைகளின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஆண்டு விழாவை ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இங்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை, ஆமைக் குட்டிகளின் மகிழ்வான காட்சியைக் காண பார்வையாளர்கள் வருகிறார்கள்.

கோவாவில் இருக்கும் அகோண்டா கடற்கரை. அக்டோபர் முதல் மார்ச் வரை லாகர்ஹெட் கடலாமைகளுக்கான கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் தளமாக இருக்கிறது. ஆண்டுதோறும் கடலாமைகள் கூடு கட்டுவதற்காக கரைக்கு வந்து சேரும். உள்ளூர் பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் முட்டைகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்க குஞ்சு பொரிப்பகங்களை நிர்வகித்து வரும் பணிகளை மேற்கொள்வார்கள்

கேரளா மாநிலத்தில் இருக்கும் கோவளம் கடற்கரை. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், கடலாமைகளை பாதுகாப்பதற்கும் பெயர் பெற்றதாகவும் உள்ளது.

கடலாமை குஞ்சுகள் பொதுவாக நவம்பர் முதல் மார்ச் வரை கூடு கட்டும் பருவத்தில் காணப்படுகின்றன, அதே சமயம் பிப்ரவரியில் கூடு கட்டும் காலம் உச்சமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் வங்காள விரிகுடாவில் மகாபலிபுரம் உள்பட அற்புதமான கடற்கரைகள் ஏராளமாக உள்ளன. இங்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஆலிவ் ரிட்லி ஆமைக் கூடுகளை காணலாம் இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் கடலாமை பாதுகாப்பு திட்டங்களையும் ஆதரிக்கிறது.

இதேபோல் தமிழ்நாட்டில் மற்றொரு கடற்கரையாக திருநெல்வேலி பகுதியில் இருக்கும் அழகிய கடற்கரைகள், ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கான முக்கியமான கூடு கட்டும் இடங்களுக்கு பெயர் பெற்றதாக உள்ளது.டிசம்பர் முதல் ஏப்ரல் வரை கூடு கட்டும் பருவமாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்