World Rabies Day: மனித உயரை கொல்லும் நோய் தொற்று..தடுப்பு நடவடிக்கை என்ன? உலக ரேபிஸ் தினம் வரலாறு, முக்கியத்துவம்
World Rabies Day 2024: மனித உயிரை கொல்லும் நோய் தொற்று வகைகளில் ஒன்றாக இருந்து வரும் ரேபிஸ் நாய், பூனை போன்ற விலங்களில் இருந்து பரவுகிறது. இந்த கொடிய நோய் தடுப்பு நடவடிக்கை பற்றியும்,உலக ரேபிஸ் தினம் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பின்னணி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

உலக ரேபிஸ் தினம் அல்லது உலக வெறிநாய் கடி தடுப்பு தினம், ரேபிஸ் தடுப்பு மற்றும் இந்த பயங்கரமான நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும். இந்த நாள் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு மருந்து கண்டறிந்த லூயிஸ் பாஸ்டர் நினைவுநாள் ஆகும்.
பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் நுண்ணுயிரியலாளர் இவர், ரேபிஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை உருவாக்கினார். உலக ரேபிஸ் தினம், வெறிநாய்க்கடிக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து குழுக்கள், அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிகழ்வாக உள்ளது. ரேபிஸ் என்பது ஒரு தொற்று வைரஸ் நோய். மருத்துவ அறிகுறிகள் தோன்றினால் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த நோயை எதிர்த்துப் போராட கால்நடை மற்றும் மனித மருத்துவத் தொழில்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ரேபிஸ் நோய் தொற்று மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசிய நாடுகளில் இன்னும் பரவலாக உள்ளது
