World Music Day: உணர்ச்சிகளை கையாளத் தெரிந்த கடவுச்சொல் - இசையின்றி ஓர் அணுவும் அசையாது!
உலக இசை நாள் இன்று உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று இறைவனைத் துதி பாடி நான் கேட்டதுண்டு. ஆனால் உண்மையில் கூற வேண்டும் என்றால் இசையின்றி இந்த உலகம் அசையாது என்பதுதான் உண்மை. இசையால் என்ன செய்ய முடியும் சற்று சிந்தித்துப் பாருங்கள் இசை இல்லாமல் நமது வாழ்க்கை நகருமா என்று வாய்ப்பே கிடையாது.
நயமாக நமது காதில் விழுவது தான் இசை என்று நினைத்தால் அது நமது மடமை. நமது உடலை ஊர்ந்து செல்லும் காற்றில் இருக்கின்றது இசை. சூரிய ஒளிபட்டு பனித்திரை விலகும் போது ஏற்படக்கூடிய இடத்தில் இருக்கின்றது இசை. சுவாசத்தில், நறுமண வாசத்தில் என அனைத்து இடத்திலும் இசை நிறைந்திருக்கின்றது.
இப்படிப்பட்ட இசைக்கு ஒரு நாள் இருக்கிறது என்றால் அது ஜூன் 21 ஆம் தேதியாகும். இசையை தொழிலாகக் கொண்டு இசை விரும்பிகள் சுதந்திரமாக இருக்கக்கூடிய நாளாக இரு கருதப்படுகிறது.
ஆம் இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களது சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் இந்த நாளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இலவசமாக இசைக்கலைஞர்கள் கட்டணம் என்று வேடிக்கையாக ஆடி பாடி இசைக்கருவிகளை வாசித்து இசையை மகிழ்கின்றனர். முதலில் பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் சாங் லாங் என்பவர் கோடைக்கால இசை நாள் கொண்டாட்டம் எனத் தொடங்கியுள்ளார். பிரெஞ்சு இசையமைப்பாளர் மோரிசு ப்ளூரெட் இவரும் சேர்ந்து இதனைத் தொடங்கியுள்ளார்.
முதலில் இந்த கொண்டாட்டமானது 1982 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் கொண்டாடப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த இசை நாள் உலகம் எங்கிலும் உள்ள 120 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இசைக்கு அடிமையாகாத உயிர்கள் ஏதேனும் இங்கு இருக்கின்றதா?. ஏதோ ஒரு வகையில் அனைத்து உயிரினங்களும் இசைக்குக் கட்டுப்பட்டுத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இந்த உலக இசை நாளின் முக்கிய நோக்கம் என்னவென்று தெரியுமா?, இசையை உருவாக்குங்கள் என்ற முழக்கத்தின் கீழ் இசைக்கலைஞர்கள் தெருக்களில் நிகழ்ச்சி நடத்த ஊக்குவிக்கப்படுகின்றன.
இப்படிப் பல இலவச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதன் மூலம் அனைத்து வகையான இசைகளும் பொதுமக்களைச் சென்றடைகிறது. இதற்கென்று ஒரு நாள் கொண்டாடப்பட்டு வந்தாலும், கொண்டாட்டங்களுக்கு எப்போதுமே தேவை இசை தான்.
நம்மைக் கொண்டாட்டத்தில் வைத்திருப்பதும் இசை தான். அனைத்து விதமான உணர்ச்சிகளையும் கையாளத் தெரிந்த ஒரே கருவி திசை மட்டும் தான். தனிமையை ஆறுதல் படுத்தக்கூடிய கடவுச்சொல் இசை தான். இறைவனாக வாழக்கூடிய இசையை ஒருவர் வாழ்வில் இருந்து என்றைக்கும் தவிர்த்து விட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. என்றைக்கும் இசையால் கொண்டாட்டத்தில் இருக்கும் நாம் இசைக்கான இந்த நாளை கொண்டாடுவோம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்