Miyazaki Mango: அடேங்கப்பா..ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.75 லட்சமா..?
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வரும் மாம்பழ கண்காட்சியில், உலகின் விலை உயர்ந்த மியாசாகி வகை மாம்பழம் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
முக்கனிகளில் முதல் கனியாக விளங்குவது மாம்பழம். இந்த பழத்திற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாம்பிடும் அளவிற்கு இதன் சுவை சுட்டி இழுக்கும். மாம்பழத்தில் அளவற்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் 'சி' யை தவிர புரதம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துக்களும் மாம்பழத்தில் நிறைந்துள்ளன. மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதனால் 'பழங்களின் அரசன்' என்றும் மாம்பழங்கள் அழைக்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் மாம்பழங்கள் பல வகைகளில் கிடைக்கிறது. கிளிமூக்கு, மல்கோவா, காசா, அல்போன்சா, ருமேனியா, பங்கனபள்ளி, இமாயத், செந்தூரம், மனோரஞ்சிதம், காளையபாடி, பங்கனபள்ளி, நீலம் என 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதிலும் ஒரு கிலோ 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய காஸ்ட்லி மாம்பழமும் இருக்கிறது. அதுதான் மியாசாகி.
இந்த மாம்பழத்தின் தாயகம் ஜப்பான் என்று அறியப்படுகிறது. மியாசாகி நகரத்தில் இந்த மாம்பழங்கள் விளைவதற்கான வெயில், மழை, மண் வளம் என அனைத்தும் சீதோஷண நிலையும் இருக்கிறது. இந்த மாங்காய் பச்சை, மஞ்சள், அடர் சிகப்பு, ஊதா நிறத்தில் இருக்கும். ஒரு பழம் 350 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். இது உலகின் காஸ்ட்லியான மாம்பழம் என சொல்லப்படுகிறது.
இந்த மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் இருப்பதால் இது கண்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். இந்த மாம்பழம் தான் தற்போது மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வரும் மாம்பழக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 260-க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகின் விலையுயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் மியாசாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேற்கு வங்காளத்தின் பிர்பூம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஷௌகத் ஹுசைன் என்பவர் 10 மியாசாகி மாம்பழங்களை காட்சிக்கு வைத்து கண்காட்சியில் பங்கேற்றுள்ளார். இந்த சர்வதேச சந்தையில் இதன் விலை ரூ.2.75 லட்சம் ஆகும். கண்காட்சியை பார்வையிட வந்தவர்கள் மியாசாகி மாம்பழத்தை ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews https://www.facebook.com/HTTamilNews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்